• Jun 21 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

Tamil nila / Jun 14th 2024, 10:52 pm
image

Advertisement

புத்தளம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பாலாவி சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளதத்தினால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று  மாலை வழங்கி வைக்கப்பட்டன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பாலாவி சமுர்த்தி வங்கி முகாமகயாளர் மானப்பெருமாள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தர்மசிறி ஜயவர்தன கலந்துகொண்டு குறித்த உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில்,  மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்களான இந்திக அருணலால், விஜயகுமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு புத்தளம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பாலாவி சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளதத்தினால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று  மாலை வழங்கி வைக்கப்பட்டன.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.பாலாவி சமுர்த்தி வங்கி முகாமகயாளர் மானப்பெருமாள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தர்மசிறி ஜயவர்தன கலந்துகொண்டு குறித்த உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.இந்த நிகழ்வில்,  மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்களான இந்திக அருணலால், விஜயகுமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement