• May 19 2024

கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் விநியோகம்: ஒருவர் கைது!

Sharmi / Jan 26th 2023, 12:28 pm
image

Advertisement

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு   விநியோகித்து வந்த   சந்தேக நபரை   கைது செய்துள்ள  கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை(24)  மாலை    நிந்தவூர்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தியேட்டர்   வீதியில்   வைத்து   சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர்   அதே பகுதியை   சேர்ந்த  25 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து  ஹெரோயின்  போதைப்பொருள் 1 கிராம் 50 மில்லிகிராம்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை  பதில் வலயக்கட்டளை அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  ஏ.டீ.டீ நெத்தசிங்கவின்  அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்  பதில்    பொறுப்பதிகாரி   பொலிஸ் பரிசோதகர்   எஸ்.எம்.பி.பி.எம்   டயஸ்  தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) சிந்தக (75492) உள்ளிட்ட  பொலிஸ் கன்டபிள்களான அபேரட்ன (75812) சிமேஸ்(90699) சங்க (101078)  சாரதி குணபால (19401) உள்ளிட்ட  அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
   
பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன்  நிந்தவூர்   பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் விநியோகம்: ஒருவர் கைது ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு   விநியோகித்து வந்த   சந்தேக நபரை   கைது செய்துள்ள  கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை(24)  மாலை    நிந்தவூர்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தியேட்டர்   வீதியில்   வைத்து   சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.இவ்வாறு கைதான நபர்   அதே பகுதியை   சேர்ந்த  25 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து  ஹெரோயின்  போதைப்பொருள் 1 கிராம் 50 மில்லிகிராம்  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை  பதில் வலயக்கட்டளை அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  ஏ.டீ.டீ நெத்தசிங்கவின்  அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்  பதில்    பொறுப்பதிகாரி   பொலிஸ் பரிசோதகர்   எஸ்.எம்.பி.பி.எம்   டயஸ்  தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) சிந்தக (75492) உள்ளிட்ட  பொலிஸ் கன்டபிள்களான அபேரட்ன (75812) சிமேஸ்(90699) சங்க (101078)  சாரதி குணபால (19401) உள்ளிட்ட  அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.   பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன்  நிந்தவூர்   பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement