• Nov 25 2024

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்.. உங்களுக்கு சில ஆலோசனைகள்..!! Samugammedia

Tamil nila / Dec 31st 2023, 10:39 pm
image

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் வரும் என்று கூறப்படும் நிலையில் இது குறித்த சில முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம்.  

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தாலும் உடல் அதிகமாக சோர்வடையும். குறிப்பாக பயணம் செய்யும்போது நீண்ட நேரம் பைக் கார்களில் உட்கார்ந்து இருப்பது நீண்ட நேரம் ஒரே நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்வது ஆகியவை ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு அமராமல் உட்கார்ந்து இருந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைவதில்லை என்றும் இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதயத்தை நிலைகுலை செய்யும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும்  பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வதால் கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்காது என்றும் இதனால் கால் வலி உள்ளிட்ட உபாதைகள் வரும் என்றும் கூறப்படுகிறது.  எனவே  நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது இடைவெளி விட்டு சிறிது நேரம் நடந்து  தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள். உங்களுக்கு சில ஆலோசனைகள். Samugammedia நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் வரும் என்று கூறப்படும் நிலையில் இது குறித்த சில முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம்.  நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தாலும் உடல் அதிகமாக சோர்வடையும். குறிப்பாக பயணம் செய்யும்போது நீண்ட நேரம் பைக் கார்களில் உட்கார்ந்து இருப்பது நீண்ட நேரம் ஒரே நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்வது ஆகியவை ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு அமராமல் உட்கார்ந்து இருந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைவதில்லை என்றும் இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதயத்தை நிலைகுலை செய்யும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும்  பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வதால் கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்காது என்றும் இதனால் கால் வலி உள்ளிட்ட உபாதைகள் வரும் என்றும் கூறப்படுகிறது.  எனவே  நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது இடைவெளி விட்டு சிறிது நேரம் நடந்து  தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement