• Nov 26 2024

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை தாக்கிய விசேட வைத்தியர் தடுத்துவைப்பு!

Chithra / Jan 18th 2024, 9:16 am
image

 

72 சுகாதார தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நேற்று முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றமையால் தாம் தாக்கப்பட்டதாக கராப்பிடிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு பேரும் கராப்பிட்டிய வைத்தியசாலை விசேட வைத்தியர் ஒருவரினால் தாம் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நேற்று பிற்பகல் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியரை காலி காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வைத்தியர் காவல்துறையினர் பாதுகாப்பில் தனியார் வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

எவ்வாறாயினும், இன்று அதிகாலை 3.00 மணி முதல் இருபதுக்கு மேற்பட்ட கனிஷ்ட ஊழியர்கள் தமது பணியை நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதேவேளை வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரி தாதியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை தாக்கிய விசேட வைத்தியர் தடுத்துவைப்பு  72 சுகாதார தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நேற்று முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றமையால் தாம் தாக்கப்பட்டதாக கராப்பிடிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.குறித்த இரண்டு பேரும் கராப்பிட்டிய வைத்தியசாலை விசேட வைத்தியர் ஒருவரினால் தாம் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், குறித்த வைத்தியருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நேற்று பிற்பகல் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியரை காலி காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட வைத்தியர் காவல்துறையினர் பாதுகாப்பில் தனியார் வைத்தியசாலையில் தங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்எவ்வாறாயினும், இன்று அதிகாலை 3.00 மணி முதல் இருபதுக்கு மேற்பட்ட கனிஷ்ட ஊழியர்கள் தமது பணியை நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்இதேவேளை வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரி தாதியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement