• Sep 20 2024

மன்னாரில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு: சுகாதார சேவைகள் முடக்கம்..! நோயாளர்கள் அவதி!

Sharmi / Feb 8th 2023, 1:49 pm
image

Advertisement

நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில்  உள்ள பல்வேறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று புதன் கிழமை (8) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த  பணிப்புறக்கணிப்பு இன்று புதன் கிழமை  (08) காலை 8. மணி தொடக்கம் நாளை வியாழன் காலை (09) 8 மணி வரையிலான 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில் மன்னார் மாவட்ட  பொது வைத்தியசாலையில் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட  சேவைகள் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநோயாளர் பிரிவு,கிளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.






மன்னாரில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு: சுகாதார சேவைகள் முடக்கம். நோயாளர்கள் அவதி நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில்  உள்ள பல்வேறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று புதன் கிழமை (8) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.குறித்த  பணிப்புறக்கணிப்பு இன்று புதன் கிழமை  (08) காலை 8. மணி தொடக்கம் நாளை வியாழன் காலை (09) 8 மணி வரையிலான 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இந்நிலையில் மன்னார் மாவட்ட  பொது வைத்தியசாலையில் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட  சேவைகள் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன், வெளிநோயாளர் பிரிவு,கிளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement