சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று(19) மதியம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தால் பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள வீதி முற்றாக முடக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வார்த்தைகளில் வேண்டாம் நல்லிணக்கம், திட்டமிட்ட கைதுகளை உடன் நிறுத்து, மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, புத்தர் சின்னம் ஆக்கிரமிப்பின் கருவியா, குருந்தூர்மலை எங்கள் சொத்து, பண்பாட்டு படுகொலையை உடன் நிறுத்து , வெடுக்குநாறி எங்கள் சொத்து உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
'மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா'. வெடுக்குநாறிமலை அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள். சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று(19) மதியம் இடம்பெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தால் பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள வீதி முற்றாக முடக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வார்த்தைகளில் வேண்டாம் நல்லிணக்கம், திட்டமிட்ட கைதுகளை உடன் நிறுத்து, மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, புத்தர் சின்னம் ஆக்கிரமிப்பின் கருவியா, குருந்தூர்மலை எங்கள் சொத்து, பண்பாட்டு படுகொலையை உடன் நிறுத்து , வெடுக்குநாறி எங்கள் சொத்து உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.