• Jul 05 2025

இலங்கை விமான நிலையத்திற்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நன்கொடை

Chithra / Jul 5th 2025, 1:29 pm
image


ஜப்பான் அரசாங்கம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பல தொழில்நுட்ப உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் துணையுடன், ஜப்பான் அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்த தொழில்நுட்ப உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் எல்லை தயார்நிலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சரக்குகளை பரிசோதனை செய்யும் உபகரணங்கள், பரிசோதனை இயந்திரங்கள் , விமான நிலைய கழிவுகளை சேகரிக்கும் லொரிகள், 50 யூரோ வண்டிகள் போன்றவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு மேலும் பல நன்கொடைகளை வழங்க ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


இலங்கை விமான நிலையத்திற்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நன்கொடை ஜப்பான் அரசாங்கம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பல தொழில்நுட்ப உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் துணையுடன், ஜப்பான் அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்த தொழில்நுட்ப உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளன.இலங்கையின் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் எல்லை தயார்நிலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.சரக்குகளை பரிசோதனை செய்யும் உபகரணங்கள், பரிசோதனை இயந்திரங்கள் , விமான நிலைய கழிவுகளை சேகரிக்கும் லொரிகள், 50 யூரோ வண்டிகள் போன்றவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கைக்கு மேலும் பல நன்கொடைகளை வழங்க ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement