• Sep 20 2024

போலியான தகவல்களை நம்பி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம் - பரூஸ் மரிக்கார்!

Tamil nila / Feb 10th 2023, 9:50 am
image

Advertisement

போலியான தகவல்களை நம்பி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாமெனவும் 1989 என்ற இலக்கத்திற்கு அழைத்து தொழில் வீசா மற்றும்  முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக் கொண்ட பின்னர் நேர்முகப் பரீட்சை மற்றும் தொழில் வீசாவுக்கு விண்ணப்பிக்குமாறு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் தலைவர் பரூஸ் மரிக்கார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.


இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ள  முகவர் நிலையங்களில் மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை செய்ய வேண்டுமெனவும்  சமூக ஊடகங்களில் வெளிவரும் போலியான தகவல்களை நம்பி நேர்முகப் பரீட்சைக்கோ அல்லது இலவசமாக வெளிநாடு செல்ல முடியுமென்ற நோக்கில் போலியான முகவர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாமெனவும் கூறினார்.


மருதானை அமல் சுல்தான் ட்ரவல்ஸ் அன்ட் ரெக்ரூட்மென்ட் காரியாலயத்தில்

 

நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நியூ ஏசியன் ட்வல்ஸ் நிறுவன உரிமையாளர் என்.பி.ரி. ஜப்பார் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் செயலாளர் அர்சாட் இப்றாஹிம் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் தலைவர், கடந்த மாதம் 25ஆம் திகதி ஜெயவர்தனபுர மண்டபத்தில் இலவசமாக வெளிநாடு அனுப்புகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் போலியான செய்தியொன்று வெளியானது. இதனை அறிந்த பலர் ஜெயவர்தனபுர மண்டபத்துக்கு வருகை தந்தது மட்டுமன்றி பல்வேறு இன்னல்களுக்கும் முகம் கொடுத்தனர். 


அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையம் என்ற வகையில் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளதுடன் துருக்கி தூதரகத்துக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடமை எமக்கு உண்டு.   இது சில விசமிகளால் செய்யப்பட்ட போலியான பிரச்சாரம் என்பதை நாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறோம். இது தொடர்பான சகல ஆவணங்களும் எம்மிடம் உள்ளன. மேற்படி செய்தியின் ஊடாக முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் காணப்படும் நன்மதிப்பை வீணடிப்பதற்கு செய்யப்பட்ட தந்திரோபாய நடவடிக்கையாக நாம் பார்க்கிறோம்.


துருக்கியில் உள்ள தனியார் கம்பனியொன்று நியூ ஏசியன் ட்வல்ஸ் நிறுவனத்திடன்  கேட்டுக் கொண்ட தொழில் வீசா எண்ணிக்கை சுமார் 2650 ஆகும். இதற்காக  இலங்கையில் இருந்து தொழிலுக்காக செல்வோர்கள் தொடர்பில் நாம் விளம்பரம் ஊடாக கோரிக்கை விடுத்தோம். எமக்கு கிடைக்கப் பெற்ற விண்ணப்பத்திற்கு அமைய கொழும்பில் உள்ள பூக்கர் மண்டபத்தில் 3 தடவைகள்  நேர்முகப் பரீட்சைகள்  இடம்பெற்றன. கடந்த 25ஆம் திகதி இறுதி நேர்முகத்தேர்வுக்காக 300 பேரை ஜெயவர்தனபுர மண்டபத்திற்கு வருகை தருமாறு  கோரியிருந்தோம்.  ஆனால், ஜெயவர்தனபுர மண்டபத்திற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள்  வருகை தந்ததுடன் இவர்கள் பூக்கர் மண்டபத்தில் இருந்து வருகை தந்தோர் என  நாம் அறிந்து கொண்டோம்.


 உண்மையில் ஏன் அவர்கள் இவ்விடத்திற்கு  வருகை தந்தார்கள் என்பது எமக்கு தெரியாது. இலவசமாக வெளிநாடு செல்ல  முடியும் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தியினால் பூக்கர் மண்டபத்திற்கு வந்தர்கள் எனில் அவ்விடத்திலேயே தங்களது தேவையை பூர்த்தி செய்து கொண்டு

 சென்றிருக்க வேண்டும். மாற்றமாக ஜெயவர்தனபுர மண்ட பத்திற்கு வருகை தந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட 300இற்கும் மேற்பட்ட தொழில் பெறுநர்களையும் இன்னல்களுக்கு உட்படுத்தியது மாத்திரமன்றி துருக்கி நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார்கள். இது ஒரு திட்டமிட்ட செயலாக இருப்பதாகவே நாம் கருதுகிறோம்.


வெளிநாட்டு முகவர் அமைப்புகளுக்கு வருகை தருவோர் அந்த நிறுவனம்  தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்று அதன் பின்னரே நேர்முகப் பரீட்சைக்கு வருகை தர வேண்டும். ஆனால், சமூக ஊடகங்களில் பரப்பப்படும்   போலியான தகவல்களை நம்பி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டாம்.


அவ்வாறே, மேற்படி தொழிலுக்கு செல்வோர் 388,194.00 ரூபா முகவர் கட்டணம் உட்பட   விமானச்சீட்டு, மருத்துவச் செலவு ஆகியவற்றை தொழில் பெறுநர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென பணியகத்தினால் வழங்கப்பட்ட ஃ2251ஃ0004ஃ22 என்ற இலக்கத்தின் ஊடாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆகவே, வெளிநாட்டுக்கு செல்வதற்கு எத்தணிக்கும் எந்தவொரு நபராக இருந்தாலும் இனிவரும் காலங்களில் தகவல்களை சரியாக அறிந்து கொண்டு பணியத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்களில்

மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை செய்யவும். வெளிநாடுகளுக்குசெல்வோர் 1989 என்ற பணியகத்துடன் இலக்கத்துடன் தொடர்பு கொண்டுதகவல்களை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போலியான தகவல்களை நம்பி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம் - பரூஸ் மரிக்கார் போலியான தகவல்களை நம்பி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாமெனவும் 1989 என்ற இலக்கத்திற்கு அழைத்து தொழில் வீசா மற்றும்  முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக் கொண்ட பின்னர் நேர்முகப் பரீட்சை மற்றும் தொழில் வீசாவுக்கு விண்ணப்பிக்குமாறு உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் தலைவர் பரூஸ் மரிக்கார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ள  முகவர் நிலையங்களில் மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை செய்ய வேண்டுமெனவும்  சமூக ஊடகங்களில் வெளிவரும் போலியான தகவல்களை நம்பி நேர்முகப் பரீட்சைக்கோ அல்லது இலவசமாக வெளிநாடு செல்ல முடியுமென்ற நோக்கில் போலியான முகவர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாமெனவும் கூறினார்.மருதானை அமல் சுல்தான் ட்ரவல்ஸ் அன்ட் ரெக்ரூட்மென்ட் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நியூ ஏசியன் ட்வல்ஸ் நிறுவன உரிமையாளர் என்.பி.ரி. ஜப்பார் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் செயலாளர் அர்சாட் இப்றாஹிம் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கருத்து தெரிவித்த உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் தலைவர், கடந்த மாதம் 25ஆம் திகதி ஜெயவர்தனபுர மண்டபத்தில் இலவசமாக வெளிநாடு அனுப்புகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் போலியான செய்தியொன்று வெளியானது. இதனை அறிந்த பலர் ஜெயவர்தனபுர மண்டபத்துக்கு வருகை தந்தது மட்டுமன்றி பல்வேறு இன்னல்களுக்கும் முகம் கொடுத்தனர். அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையம் என்ற வகையில் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளதுடன் துருக்கி தூதரகத்துக்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடமை எமக்கு உண்டு.   இது சில விசமிகளால் செய்யப்பட்ட போலியான பிரச்சாரம் என்பதை நாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறோம். இது தொடர்பான சகல ஆவணங்களும் எம்மிடம் உள்ளன. மேற்படி செய்தியின் ஊடாக முகவர் நிறுவனங்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் காணப்படும் நன்மதிப்பை வீணடிப்பதற்கு செய்யப்பட்ட தந்திரோபாய நடவடிக்கையாக நாம் பார்க்கிறோம்.துருக்கியில் உள்ள தனியார் கம்பனியொன்று நியூ ஏசியன் ட்வல்ஸ் நிறுவனத்திடன்  கேட்டுக் கொண்ட தொழில் வீசா எண்ணிக்கை சுமார் 2650 ஆகும். இதற்காக  இலங்கையில் இருந்து தொழிலுக்காக செல்வோர்கள் தொடர்பில் நாம் விளம்பரம் ஊடாக கோரிக்கை விடுத்தோம். எமக்கு கிடைக்கப் பெற்ற விண்ணப்பத்திற்கு அமைய கொழும்பில் உள்ள பூக்கர் மண்டபத்தில் 3 தடவைகள்  நேர்முகப் பரீட்சைகள்  இடம்பெற்றன. கடந்த 25ஆம் திகதி இறுதி நேர்முகத்தேர்வுக்காக 300 பேரை ஜெயவர்தனபுர மண்டபத்திற்கு வருகை தருமாறு  கோரியிருந்தோம்.  ஆனால், ஜெயவர்தனபுர மண்டபத்திற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள்  வருகை தந்ததுடன் இவர்கள் பூக்கர் மண்டபத்தில் இருந்து வருகை தந்தோர் என  நாம் அறிந்து கொண்டோம். உண்மையில் ஏன் அவர்கள் இவ்விடத்திற்கு  வருகை தந்தார்கள் என்பது எமக்கு தெரியாது. இலவசமாக வெளிநாடு செல்ல  முடியும் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தியினால் பூக்கர் மண்டபத்திற்கு வந்தர்கள் எனில் அவ்விடத்திலேயே தங்களது தேவையை பூர்த்தி செய்து கொண்டு சென்றிருக்க வேண்டும். மாற்றமாக ஜெயவர்தனபுர மண்ட பத்திற்கு வருகை தந்து அங்கு தெரிவு செய்யப்பட்ட 300இற்கும் மேற்பட்ட தொழில் பெறுநர்களையும் இன்னல்களுக்கு உட்படுத்தியது மாத்திரமன்றி துருக்கி நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார்கள். இது ஒரு திட்டமிட்ட செயலாக இருப்பதாகவே நாம் கருதுகிறோம்.வெளிநாட்டு முகவர் அமைப்புகளுக்கு வருகை தருவோர் அந்த நிறுவனம்  தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்று அதன் பின்னரே நேர்முகப் பரீட்சைக்கு வருகை தர வேண்டும். ஆனால், சமூக ஊடகங்களில் பரப்பப்படும்   போலியான தகவல்களை நம்பி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டாம்.அவ்வாறே, மேற்படி தொழிலுக்கு செல்வோர் 388,194.00 ரூபா முகவர் கட்டணம் உட்பட   விமானச்சீட்டு, மருத்துவச் செலவு ஆகியவற்றை தொழில் பெறுநர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென பணியகத்தினால் வழங்கப்பட்ட ஃ2251ஃ0004ஃ22 என்ற இலக்கத்தின் ஊடாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே, வெளிநாட்டுக்கு செல்வதற்கு எத்தணிக்கும் எந்தவொரு நபராக இருந்தாலும் இனிவரும் காலங்களில் தகவல்களை சரியாக அறிந்து கொண்டு பணியத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்களில்மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை செய்யவும். வெளிநாடுகளுக்குசெல்வோர் 1989 என்ற பணியகத்துடன் இலக்கத்துடன் தொடர்பு கொண்டுதகவல்களை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement