• Nov 25 2024

கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம்..! ஞானசார தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Jan 4th 2024, 9:20 am
image

கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சில கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் மத போதகர் ஒருவரின் போதனைகளினால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

உயிரை மாய்த்துக் கொள்வது பாவ செயல் என பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கு உதவுதலும் பாரிய பாவச் செயல் என பௌத்த தர்மம் கூறுகிறது.

இந்நிலையில், நாம் தர்ம மார்க்க நெறியில் பணிக்க வேண்டும். கடும்போக்குவாத மதங்களை பின்தொடர்ந்து பெறுமதியான உயிர்களை அழித்துக் கொள்ளத் தேவையில்லை. 

காளான் முளைப்பது போன்று உருவாகும் மதக் கும்பல்கள் மத போதகர்கள் தொடர்பில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம். ஞானசார தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை கடும்போக்குவாத மதங்களை பின்தொடர வேண்டாம் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சில கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் மத போதகர் ஒருவரின் போதனைகளினால் ஏற்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த கூட்டுத் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.உயிரை மாய்த்துக் கொள்வது பாவ செயல் என பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு உதவுதலும் பாரிய பாவச் செயல் என பௌத்த தர்மம் கூறுகிறது.இந்நிலையில், நாம் தர்ம மார்க்க நெறியில் பணிக்க வேண்டும். கடும்போக்குவாத மதங்களை பின்தொடர்ந்து பெறுமதியான உயிர்களை அழித்துக் கொள்ளத் தேவையில்லை. காளான் முளைப்பது போன்று உருவாகும் மதக் கும்பல்கள் மத போதகர்கள் தொடர்பில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement