வட மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
அதற்கமைய இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆசரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது “அடிமைச் சேவகம் புரியம் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே!”, “நிறுத்து நிறுத்து அரசியல் தலையீட்டை நிறுத்து” வடமாகாண கல்வி அமைச்சே உனது மோசடிகளால் குடும்பங்களை சிதைக்காதே” உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடிமைச் சேவகம் புரியம் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே ஆளுநர் செயலகம் முன் போராட்டத்தில் குதித்த இலங்கை ஆசிரியர் சங்கம் வட மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். அதற்கமைய இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆசரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்போது “அடிமைச் சேவகம் புரியம் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே”, “நிறுத்து நிறுத்து அரசியல் தலையீட்டை நிறுத்து” வடமாகாண கல்வி அமைச்சே உனது மோசடிகளால் குடும்பங்களை சிதைக்காதே” உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.