• May 10 2024

யுக்திய நடவடிக்கை தொடர்பில் சந்தேகம்..! ஹிருணிகா வெளியிட்ட பரபரப்புத் தகவல்

Chithra / Jan 8th 2024, 9:06 am
image

Advertisement

 

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வரும் யுக்திய நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கான சோதனைகள் நடவடிக்கையின் போது சில பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் இருப்பதை அனைவரும் அறிந்திருப்பதாகவும் அவர்கள் தெமட்டகொட போன்ற பகுதிகளில் வலுவாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தெமட்டகொடையில் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரால் பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த பகுதியில் போதைப்பொருள் தேடும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுக்திய நடவடிக்கை தொடர்பில் சந்தேகம். ஹிருணிகா வெளியிட்ட பரபரப்புத் தகவல்  போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வரும் யுக்திய நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கான சோதனைகள் நடவடிக்கையின் போது சில பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் இருப்பதை அனைவரும் அறிந்திருப்பதாகவும் அவர்கள் தெமட்டகொட போன்ற பகுதிகளில் வலுவாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், தெமட்டகொடையில் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரால் பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, குறித்த பகுதியில் போதைப்பொருள் தேடும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement