• May 22 2024

திலீபனின் நினைவு நாளை குழப்ப கைக்கூலி டக்ளசும், அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர்...! சிறீதரன் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Sep 26th 2023, 11:59 am
image

Advertisement

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் நினைவு நாளை குழப்ப கைக்கூலி டக்ளசும்,  அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்  குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அனைத்து நினைவேந்தல்களிற்கும் அனுமதி வழங்கியுள்ளதாகவும், எந்த தடையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறே சரத் வீரசேகரவும் கூறினார். ஆனாலும், நாங்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

ஜனாதிபதி இவ்வாறு கூறினாலும், எத்தனை கண்காணிப்புக்கள் இங்கு உள்ளது. எமது உரைகளை அவர்கள் ஒலிப்பதிவு செய்கின்றனர். எம்மை சுற்றி கண்காணிப்பிலும்,விபரங்களை திரட்டியும் வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, அரசாங்கத்தின் கைக்கூலியான டக்ளசும், அரச அதிபரும் சேர்ந்து இந்த நினைவேந்தலை குழப்புவதற்காக அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்துகின்றனர்.

குறித்த கூட்டத்திற்கு வருவீர்களா என நேற்றைய தினம் திட்டமிடல் பணிப்பாளர் கேட்டார். இன்று நினைவேந்தல் உண்டு. அது தெரியாமல் நீங்கள் இப்படி ஏற்பாடுகள் செய்யலாமா?

அரசாங்கத்தின் பிரதிநிதியான அரச அதிபரும், கைக்கூலி டக்ளசும் இவ்வாறு திட்டமிட்டு செயற்படுகின்றனர். ஓய்வுக்கு பின்னரான தமிழ்த் தேசியவாதியாக இருக்காதீர்கள். உணர்ந்து செயற்படுங்கள் என மேலும் தெரிவித்தார்.

திலீபனின் நினைவு நாளை குழப்ப கைக்கூலி டக்ளசும், அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர். சிறீதரன் குற்றச்சாட்டு.samugammedia அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் நினைவு நாளை குழப்ப கைக்கூலி டக்ளசும்,  அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்  குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அனைத்து நினைவேந்தல்களிற்கும் அனுமதி வழங்கியுள்ளதாகவும், எந்த தடையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.இவ்வாறே சரத் வீரசேகரவும் கூறினார். ஆனாலும், நாங்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றோம்.ஜனாதிபதி இவ்வாறு கூறினாலும், எத்தனை கண்காணிப்புக்கள் இங்கு உள்ளது. எமது உரைகளை அவர்கள் ஒலிப்பதிவு செய்கின்றனர். எம்மை சுற்றி கண்காணிப்பிலும்,விபரங்களை திரட்டியும் வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க, அரசாங்கத்தின் கைக்கூலியான டக்ளசும், அரச அதிபரும் சேர்ந்து இந்த நினைவேந்தலை குழப்புவதற்காக அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்துகின்றனர்.குறித்த கூட்டத்திற்கு வருவீர்களா என நேற்றைய தினம் திட்டமிடல் பணிப்பாளர் கேட்டார். இன்று நினைவேந்தல் உண்டு. அது தெரியாமல் நீங்கள் இப்படி ஏற்பாடுகள் செய்யலாமாஅரசாங்கத்தின் பிரதிநிதியான அரச அதிபரும், கைக்கூலி டக்ளசும் இவ்வாறு திட்டமிட்டு செயற்படுகின்றனர். ஓய்வுக்கு பின்னரான தமிழ்த் தேசியவாதியாக இருக்காதீர்கள். உணர்ந்து செயற்படுங்கள் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement