• Oct 03 2024

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக டக்லஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்..!!

Tamil nila / Jan 14th 2024, 3:18 pm
image

Advertisement

மன்னார் மீனவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்சியாக எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வை பெற்று கொடுக்கு விசேட கூட்டம் இன்றைய தினம் (14) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிபணிப்பாளர் கலிஸ்ரன் ஒழுங்கமைப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவாந்தா தலைமையில் கடற்றொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலை செயற்திட்டதிற்கு மீனவர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பு தொடர்பிலும், அத்துடன் மாவட்ட ரீதியாக இடம் பெறும் சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கை உட்பட பல்வேறு  பிரச்சினைகள் தொடர்பிலும் மீனவர்களால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.



அத்துடன் கடல் அட்டை பண்ணைகள்,இறால் பண்ணைகளால் கிராம மட்ட மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அனர்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.


இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளான டைனமோட்,சுருக்குவலை ,பத்தை வைத்தல்,உள்ளூர் இழுவைபடகு மீன் பிடி,இரவு நேர சுருக்குவலை,டைவிங் என பல்வேறு பட்ட தொழில் நடவடிக்கைகளை உடனடியாக கடற்படை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடற்படைக்கு அமைச்சர் உத்தரவு பிறப்புத்ததுடன் மீனவ சங்கங்கள் மற்றும் சமாசங்களும் கடற்படையுடன் இணைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கான  ஒத்துழைப்பை வழங்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



அத்துடன் இந்திய மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இந்திய இலுவைபடகுகளை உள்ளூர் மீனவர்கள் இணைந்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுத்தார்

அத்துடன் அனர்தங்களின் போதும் சூறாவளி,மற்றும் புயலின் போதும் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் போது நிவாரணம் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் இந்திய இலுவை படகு தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்களுடனான விரைவில் கலந்துரையாடலை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.


மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக டக்லஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல். மன்னார் மீனவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்சியாக எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வை பெற்று கொடுக்கு விசேட கூட்டம் இன்றைய தினம் (14) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிபணிப்பாளர் கலிஸ்ரன் ஒழுங்கமைப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவாந்தா தலைமையில் கடற்றொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலை செயற்திட்டதிற்கு மீனவர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பு தொடர்பிலும், அத்துடன் மாவட்ட ரீதியாக இடம் பெறும் சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கை உட்பட பல்வேறு  பிரச்சினைகள் தொடர்பிலும் மீனவர்களால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.அத்துடன் கடல் அட்டை பண்ணைகள்,இறால் பண்ணைகளால் கிராம மட்ட மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அனர்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளான டைனமோட்,சுருக்குவலை ,பத்தை வைத்தல்,உள்ளூர் இழுவைபடகு மீன் பிடி,இரவு நேர சுருக்குவலை,டைவிங் என பல்வேறு பட்ட தொழில் நடவடிக்கைகளை உடனடியாக கடற்படை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கடற்படைக்கு அமைச்சர் உத்தரவு பிறப்புத்ததுடன் மீனவ சங்கங்கள் மற்றும் சமாசங்களும் கடற்படையுடன் இணைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கான  ஒத்துழைப்பை வழங்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் இந்திய மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இந்திய இலுவைபடகுகளை உள்ளூர் மீனவர்கள் இணைந்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுத்தார்அத்துடன் அனர்தங்களின் போதும் சூறாவளி,மற்றும் புயலின் போதும் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் போது நிவாரணம் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் இந்திய இலுவை படகு தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்களுடனான விரைவில் கலந்துரையாடலை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement