மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர் வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.
உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை.சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம்(01) அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் நினைவு பகிர்ந்தனர்.
இதேநேரம் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்குகள் நாளை பிற்பகல் 3 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவை.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி. மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர் வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை.சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்றையதினம்(01) அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் நினைவு பகிர்ந்தனர்.இதேநேரம் மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்குகள் நாளை பிற்பகல் 3 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.