• Jun 18 2024

சிபாரிசு கடிதம் பெறுவதற்காக ஒரு மாதமாக இழுத்தடிப்பு...! பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு...!

Sharmi / Jun 15th 2024, 10:11 am
image

Advertisement

மத்திய மலைநாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உப பிரதேச செயலகமொன்றில் சிபாரிசு கடிதம் பெறுவதற்காக சென்ற பெண்ணொருவருக்கு கடந்த ரு மாதங்களாக குறித்த கடிதத்தை வழங்காது இழுத்தடிப்பு செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,

குடும்பத்தில் பாரிய பொருளாதார பிரச்சினை.  எனக்கு மூன்று பிள்ளைகள்.  தோட்டத்தில்  போதிய வருமானம் இல்லாமல் வெளிநாடு சென்று எனது குடும்ப வறுமையை ஈடுசெய்யும் நோக்கில் முகவர் ஒருவர் மூலம் வெளிநாடு செல்ல சகல ஏற்பாடுகளும் செய்து முடித்து  இறுதியில் பிரதேச செயலகத்தின் கடிதம் பெற வேண்டிய நிலையில்  கடந்த மாதம் முதல் அலைந்து வருகிறேன் .

அங்குள்ள அதிகாரி ஒருவர் பத்தாயிரம் ரூபாய் கேட்டு கடந்த ஒரு மாதமாக என்னை இழுத்தடிப்பு செய்து வருகிறார்.

இதனால் எனக்கு வெளிநாடு செல்ல முடியாதுள்ளது. இவ்வாறான அதிகாரிகளின் இந்த செயலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார்.


சிபாரிசு கடிதம் பெறுவதற்காக ஒரு மாதமாக இழுத்தடிப்பு. பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு. மத்திய மலைநாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உப பிரதேச செயலகமொன்றில் சிபாரிசு கடிதம் பெறுவதற்காக சென்ற பெண்ணொருவருக்கு கடந்த ஒரு மாதங்களாக குறித்த கடிதத்தை வழங்காது இழுத்தடிப்பு செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,குடும்பத்தில் பாரிய பொருளாதார பிரச்சினை.  எனக்கு மூன்று பிள்ளைகள்.  தோட்டத்தில்  போதிய வருமானம் இல்லாமல் வெளிநாடு சென்று எனது குடும்ப வறுமையை ஈடுசெய்யும் நோக்கில் முகவர் ஒருவர் மூலம் வெளிநாடு செல்ல சகல ஏற்பாடுகளும் செய்து முடித்து  இறுதியில் பிரதேச செயலகத்தின் கடிதம் பெற வேண்டிய நிலையில்  கடந்த மாதம் முதல் அலைந்து வருகிறேன் .அங்குள்ள அதிகாரி ஒருவர் பத்தாயிரம் ரூபாய் கேட்டு கடந்த ஒரு மாதமாக என்னை இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதனால் எனக்கு வெளிநாடு செல்ல முடியாதுள்ளது. இவ்வாறான அதிகாரிகளின் இந்த செயலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement