• Nov 26 2024

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை - அனர்த்தத்தை எதிர்கொள்ள ஏற்பாடுகள் முன்னெடுப்பு

Chithra / Nov 24th 2024, 12:13 pm
image


தற்போது கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை இன்னும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் முகமது அப்துல் காதர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.

தற்போதுள்ள தாழமுக்க நிலை இன்று (24) அம்பாறை மாவட்ட கரையார பிராந்தியத்தில் நிலை கொள்வதால் எதிர்வரும் 25ம்,26ம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் அதிகளிவு மழை வீழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையினால் அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் மக்கள் இடம் பெயர்வுகள் எதுவும் பதிவாகவில்லை.

மக்கள் எதிர்வரும் நாட்களில் அனர்த்த நிலையினை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. என்றார்.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகள் பிரதேச செயலாளர்கள் ஊடாக இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று சின்னமுகத்துவார கழிமுகம் இன்று காலை வெட்டப்பட்டு வெள்ள நீர் வழிந்தோட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.


அம்பாறை மாவட்டத்தில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை - அனர்த்தத்தை எதிர்கொள்ள ஏற்பாடுகள் முன்னெடுப்பு தற்போது கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை இன்னும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் முகமது அப்துல் காதர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.தற்போதுள்ள தாழமுக்க நிலை இன்று (24) அம்பாறை மாவட்ட கரையார பிராந்தியத்தில் நிலை கொள்வதால் எதிர்வரும் 25ம்,26ம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் அதிகளிவு மழை வீழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையினால் அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் மக்கள் இடம் பெயர்வுகள் எதுவும் பதிவாகவில்லை.மக்கள் எதிர்வரும் நாட்களில் அனர்த்த நிலையினை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும் கிழக்கு மாகாணத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. என்றார்.மேலும் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகள் பிரதேச செயலாளர்கள் ஊடாக இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று சின்னமுகத்துவார கழிமுகம் இன்று காலை வெட்டப்பட்டு வெள்ள நீர் வழிந்தோட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement