• May 17 2024

இலங்கை வைத்தியசாலைகளில் போதைப்பொருள் வியாபாரம் - வெளியான அதிர்ச்சித் தகவல்

harsha / Dec 5th 2022, 5:51 pm
image

Advertisement

மருத்துவமனை சிறு ஊழியர்களில் 5% முதல் 10% ஊழியர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய 90 சதவீத ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவோ அல்லது அவர்கள் கடமைகளை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை என மன்றத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷன் பெல்னா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் இதனை தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையான சிறு ஊழியர்கள் ஏனைய ஊழியர்களை விடுப்பு எடுத்து வேலைக்குச் செல்லாமல் கட்டாயப்படுத்தினர், இது முழு மருத்துவமனை அமைப்பையும் பாதிக்கிறது.

இந்த போதைக்கு அடிமையானவர்களால், நோயாளிகள் மொபைல் போன்கள், சுடுநீர் போத்தல்கள் மற்றும் நகைகளை கூட இழக்கின்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்த போதைப்பொருள் பாவனையின் விளைவாக, மருத்துவமனைகளில் பணிபுரியும் சிறு ஊழியர்களில் அதிகமானோர் தங்கள் கடமைகளைத் தவறவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“நாளாந்தம் வேலைக்குச் செல்லாத அல்லது முழுமையாக பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் குறித்து சி.ஐ.டி., பொலிஸ் புலனாய்வு மற்றும் மருத்துவமனை வார்ட் தலைவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ளார்.

இலங்கை வைத்தியசாலைகளில் போதைப்பொருள் வியாபாரம் - வெளியான அதிர்ச்சித் தகவல் மருத்துவமனை சிறு ஊழியர்களில் 5% முதல் 10% ஊழியர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.எஞ்சிய 90 சதவீத ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவோ அல்லது அவர்கள் கடமைகளை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை என மன்றத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷன் பெல்னா தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் இதனை தெரிவித்துள்ளார்.போதைக்கு அடிமையான சிறு ஊழியர்கள் ஏனைய ஊழியர்களை விடுப்பு எடுத்து வேலைக்குச் செல்லாமல் கட்டாயப்படுத்தினர், இது முழு மருத்துவமனை அமைப்பையும் பாதிக்கிறது.இந்த போதைக்கு அடிமையானவர்களால், நோயாளிகள் மொபைல் போன்கள், சுடுநீர் போத்தல்கள் மற்றும் நகைகளை கூட இழக்கின்றனர்.கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்த போதைப்பொருள் பாவனையின் விளைவாக, மருத்துவமனைகளில் பணிபுரியும் சிறு ஊழியர்களில் அதிகமானோர் தங்கள் கடமைகளைத் தவறவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.“நாளாந்தம் வேலைக்குச் செல்லாத அல்லது முழுமையாக பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் குறித்து சி.ஐ.டி., பொலிஸ் புலனாய்வு மற்றும் மருத்துவமனை வார்ட் தலைவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement