• Apr 15 2025

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை; வெள்ளரிப்பழ விற்பனை அமோகம்

Chithra / Apr 14th 2025, 2:34 pm
image


தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.

குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி,  கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி,  மோட்டார் சைக்கிள்,  முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

சித்திரை புத்தாண்டு தினத்திலும் இதனை  வெள்ளரிப்பழத்தினை  பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வவு செய்வதை அவதானிக்க முடிந்ந்தது.

தற்போது நிலவி வருகின்ற  வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல்  ஊஷ்ணத்தை  தவிர்ப்பதற்காக   வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு வெளி இடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற பழ வகைகளின் தரங்களை பரிசோதிப்பதற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன்  ஆலோசனைக்கமைய சுகாதார பரிசோதகர்கள் தினமும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை; வெள்ளரிப்பழ விற்பனை அமோகம் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி,  கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி,  மோட்டார் சைக்கிள்,  முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.சித்திரை புத்தாண்டு தினத்திலும் இதனை  வெள்ளரிப்பழத்தினை  பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வவு செய்வதை அவதானிக்க முடிந்ந்தது.தற்போது நிலவி வருகின்ற  வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல்  ஊஷ்ணத்தை  தவிர்ப்பதற்காக   வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.இவ்வாறு வெளி இடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற பழ வகைகளின் தரங்களை பரிசோதிப்பதற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன்  ஆலோசனைக்கமைய சுகாதார பரிசோதகர்கள் தினமும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement