திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்கு இனந்தெரியாத நபரால் தீ வைக்கப்பட்டதால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகைதீன் பிச்சை சேகாலம் என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வீட்டில் இல்லாத நேரத்தில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
வீட்டு தளபாடங்கள் என பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நிலாவெளி பகுயில் வீடொன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்கு இனந்தெரியாத நபரால் தீ வைக்கப்பட்டதால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முகைதீன் பிச்சை சேகாலம் என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வீட்டில் இல்லாத நேரத்தில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.வீட்டு தளபாடங்கள் என பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.