பொம்மைவெளி ஒன்பதாம் குறிச்சியில் மழைக் காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இப் பிரதேசத்தில் வெள்ள நீர் குடியிருப்பாளர்களின் வளவுகளுக்குள் மற்றும் வீதிகளில் தேங்கி நிற்பதால் மக்கள் அசௌகரியங்களுக்குஉள்ளாகிறார்கள்.
இப் பிரதேசத்தில் மழை காலத்தில் வீதிகளால் பிரயாணம் செய்வது மிகவும் சிரமாக உள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தேர்தல் காலங்களில் வரும் அரசியல் கட்சி சார்தவர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
எனினும் இம்முறை ஆட்சிக்கு வந்த அனுர அரசாங்கம் இமது பிரச்சினையைத் தீர்ப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என இப் பகுதி மக்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றார்கள்.
மேலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் நுளம்புப் பெருக்கம் அதிகமாகி டெங்கு நோய்த் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
பொம்மைவெளியில் மழைக் காலங்களில் - வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு பொம்மைவெளி ஒன்பதாம் குறிச்சியில் மழைக் காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது. இப் பிரதேசத்தில் வெள்ள நீர் குடியிருப்பாளர்களின் வளவுகளுக்குள் மற்றும் வீதிகளில் தேங்கி நிற்பதால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகிறார்கள்.இப் பிரதேசத்தில் மழை காலத்தில் வீதிகளால் பிரயாணம் செய்வது மிகவும் சிரமாக உள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக தேர்தல் காலங்களில் வரும் அரசியல் கட்சி சார்தவர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. எனினும் இம்முறை ஆட்சிக்கு வந்த அனுர அரசாங்கம் இமது பிரச்சினையைத் தீர்ப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என இப் பகுதி மக்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றார்கள்.மேலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் நுளம்புப் பெருக்கம் அதிகமாகி டெங்கு நோய்த் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.