பாகிஸ்தானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பல நகரங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல இடங்களில் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன. பாகிஸ்தானில் ரிக்டரில் 5.8 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான், இந்தியாவில் கடுமையாக நில அதிர்வுகள் உணரப்பட்டன. ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லை பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டது. டெல்லியின் பல இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இதேபோல ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
பாகிஸ்தானில் பதற வைத்த நில அதிர்வு- பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் பாகிஸ்தானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பல நகரங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல இடங்களில் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன. பாகிஸ்தானில் ரிக்டரில் 5.8 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான், இந்தியாவில் கடுமையாக நில அதிர்வுகள் உணரப்பட்டன. ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லை பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டது. டெல்லியின் பல இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இதேபோல ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.