• May 19 2024

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் – மண்னோடு புதைந்த மக்கள் – 128 பேர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Nov 4th 2023, 8:43 am
image

Advertisement

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது

நேபாளத்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.

பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்திருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதத்திலும் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனையடுத்து நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சில குலுங்கி சரிந்துள்ளன.

இரவு 11 மணிக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று காலை 5 மணி நிலவரப்படி சுமார் 70 பேர் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தின் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜாஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தின் நிலப்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் நில தகடுகள் நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதேபோல வட இந்தியாவின் டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் – மண்னோடு புதைந்த மக்கள் – 128 பேர் உயிரிழப்பு samugammedia இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறதுநேபாளத்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.பூமிக்கடியில் இருக்கும் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்திருக்கிறது.கடந்த அக்டோபர் மாதத்திலும் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனையடுத்து நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் சில குலுங்கி சரிந்துள்ளன.இரவு 11 மணிக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இன்று காலை 5 மணி நிலவரப்படி சுமார் 70 பேர் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நேபாளத்தின் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜாஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.நேபாளத்தின் நிலப்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் நில தகடுகள் நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதேபோல வட இந்தியாவின் டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement