• May 03 2024

ஜப்பானில் 2 வது முறையாக நிலநடுக்கம் - ரிக்டரில் 6.3 ஆக பதிவு

Chithra / Apr 4th 2024, 11:39 am
image

Advertisement


ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானின் புக்குஷிமா (Fukushima) பகுதியை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் அறிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டோக்கியோ (Tokyo) வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய - மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் 2 வது முறையாக நிலநடுக்கம் - ரிக்டரில் 6.3 ஆக பதிவு ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ஜப்பானின் புக்குஷிமா (Fukushima) பகுதியை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் அறிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டோக்கியோ (Tokyo) வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய - மத்தியதரைகடல் பகுதிகளுக்கான நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement