• May 17 2024

அமெரிக்காவின் இரு வேறு பகுதிகளில் நில நடுக்கங்கள் பதிவு..!

Tamil nila / Apr 6th 2024, 5:54 am
image

Advertisement

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரத்தில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலும் நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் இரு வேறு பகுதிகளில் நில நடுக்கங்கள் பதிவு. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் நகரத்தில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலும் நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement