• Jan 08 2025

வட மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி - ஆளுநர் நா. வேதநாயகன்

Tharmini / Jan 1st 2025, 5:04 pm
image

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். 

வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் தேவையுடைய மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று  (01) வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு இன்னமும் காத்திரமுள்ளதாக மாற்றுவோம் என அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார். 

வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தனது உரையில், வடக்கு மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆனால் வெளிமாகாணங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் தங்களை இந்தத் திட்டத்தில் உள்ளீர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும், எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தனதுரையில், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவன் என்றும், அவர்கள் அரச சேவையில் காலடி எடுத்து வைத்த காலம் நெருப்பாற்றை நீந்திக் கடக்கவேண்டிய காலம் எனவும் குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தெரிவித்தார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நன்கொடைத் திட்டங்களைப்பார்த்து பலரும் வியப்பதாகவும் குறிப்பிட்டார். வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சார்பில் கலந்துகொண்ட பீடாதிபதி தனது உரையில், யாழ். பல்கலைக்கழகம் வட மாகாண சபையுடன் ஏற்கனவே இணைந்து செயற்படுவதைப்போல தமது பல்கலைக்கழகமும் எதிர்காலத்தில் இணைந்து செயற்படும் என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், யாழ். மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் புலம்பெயர் தேசத்திலிருந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்பதைக்குறிப்பிட்டார்.

தற்போது இங்குள்ள ஆலயங்களில் எப்படிப் பிளவுகள் இருக்கின்றனவோ அதைப்போல புலம்பெயர் தேசங்களிலும் பிளவுகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி அதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உதவிகள் சில இல்லாமல் போயுள்ளன எனவும் ஆளுநர் கவலை வெளியிட்டார்.

தமது அரச சேவையின் ஆரம்ப காலங்களில் அளவெட்டியிலிருந்து குறிகாட்டுவான் வரையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்து அந்த துவிச்சக்கரவண்டியையும் குமுதினிப் படகில் ஏற்றிச் சென்று நெடுந்தீவில் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார்.

அவ்வாறு பணியாற்றியமையால்தான் எதையும் செய்யக்கூடிய மனநிலை, எதையும் செய்யும் துணிவு வந்தது எனக் குறிப்பிட்ட ஆளுநர், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியமையையும் அதன் ஊடாக மக்களுக்கு பல சேவைகள் செய்தமையையும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 722 மாணவர்கள் இந்தத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்;ட நிலையில் அவர்களில் நூறு பேருக்கு இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக அவை வழங்கப்பட்டன. 



வட மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி - ஆளுநர் நா. வேதநாயகன் வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் தேவையுடைய மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று  (01) வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. சமூகசேவைகள் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு இன்னமும் காத்திரமுள்ளதாக மாற்றுவோம் என அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார். வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தனது உரையில், வடக்கு மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே இந்த நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆனால் வெளிமாகாணங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் தங்களை இந்தத் திட்டத்தில் உள்ளீர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும், எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தனதுரையில், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவன் என்றும், அவர்கள் அரச சேவையில் காலடி எடுத்து வைத்த காலம் நெருப்பாற்றை நீந்திக் கடக்கவேண்டிய காலம் எனவும் குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நன்கொடைத் திட்டங்களைப்பார்த்து பலரும் வியப்பதாகவும் குறிப்பிட்டார். வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சார்பில் கலந்துகொண்ட பீடாதிபதி தனது உரையில், யாழ். பல்கலைக்கழகம் வட மாகாண சபையுடன் ஏற்கனவே இணைந்து செயற்படுவதைப்போல தமது பல்கலைக்கழகமும் எதிர்காலத்தில் இணைந்து செயற்படும் என்று குறிப்பிட்டார்.ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், யாழ். மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் புலம்பெயர் தேசத்திலிருந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்பதைக்குறிப்பிட்டார்.தற்போது இங்குள்ள ஆலயங்களில் எப்படிப் பிளவுகள் இருக்கின்றனவோ அதைப்போல புலம்பெயர் தேசங்களிலும் பிளவுகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி அதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உதவிகள் சில இல்லாமல் போயுள்ளன எனவும் ஆளுநர் கவலை வெளியிட்டார்.தமது அரச சேவையின் ஆரம்ப காலங்களில் அளவெட்டியிலிருந்து குறிகாட்டுவான் வரையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்து அந்த துவிச்சக்கரவண்டியையும் குமுதினிப் படகில் ஏற்றிச் சென்று நெடுந்தீவில் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார். அவ்வாறு பணியாற்றியமையால்தான் எதையும் செய்யக்கூடிய மனநிலை, எதையும் செய்யும் துணிவு வந்தது எனக் குறிப்பிட்ட ஆளுநர், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியமையையும் அதன் ஊடாக மக்களுக்கு பல சேவைகள் செய்தமையையும் சுட்டிக்காட்டினார்.வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 722 மாணவர்கள் இந்தத் திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்;ட நிலையில் அவர்களில் நூறு பேருக்கு இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக அவை வழங்கப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement