• Nov 28 2024

குரங்குகளின் அட்டகாசத்தால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு..!

Sharmi / Sep 26th 2024, 3:49 pm
image

அக்கரபத்தனை, மற்றும் தலவாக்கலை மன்ராசி தமிழ் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் தமது பிள்ளைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் பெருமளவான குரங்கு  வருகையால் கடும் நெருக்கடிக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமும் பாடசாலை வளாகத்தில் இந்த குரங்கு கூட்டம் சுற்றித் திரிவதாகவும், பாடசாலை மாணவர்கள் பையில் உள்ள உணவுப் பாத்திரங்கள், உணவு பொதிகள் , தண்ணீர் போத்தல்களை   எடுத்துச் செல்வதால் பாடசாலை மாணவர்கள் குழந்தைகள் சிரமம் அடைவதாகவும் கூறுகின்றனர்.

மாணவர்களின் பாடசாலை புத்தகங்கள், பாடசாலையில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்கள், பாடசாலை பைகள், ஆசிரியர்களின் பைகள் போன்றவற்றை கிழித்து, அவர்களின் உடைமைகளை அபகரித்து செல்வதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

பாடசாலையில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குவதற்கு பொறுப்பான வன பாதுகாப்பு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மேலும் கோருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த  மன்ராசி தமிழ் உயர்தரப் பாடசாலை முதல்வர் எஸ். திரு. ஜெஸ்டின்,

'எங்கள் பாடசாலையில் சுமார் 420 மாணவர்கள் படிக்கின்றனர். தரம் ஒன்று முதல் உயர் தரம் வரையான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

இப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையால் ஆசிரியர்கள், சிறுவர்கள் பல்வேறு சிரமங்களையும், அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். 

கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை கண்டு பயந்து ஓடுவதால் குழந்தைகள் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. 

சில சந்தர்ப்பங்களில், காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.      

இது பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. 

இதுகுறித்து அப்பகுதி கிராம அதிகாரிகளுக்கும், வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை. 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இப் பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




குரங்குகளின் அட்டகாசத்தால் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு. அக்கரபத்தனை, மற்றும் தலவாக்கலை மன்ராசி தமிழ் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் தமது பிள்ளைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் பெருமளவான குரங்கு  வருகையால் கடும் நெருக்கடிக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் பாடசாலை வளாகத்தில் இந்த குரங்கு கூட்டம் சுற்றித் திரிவதாகவும், பாடசாலை மாணவர்கள் பையில் உள்ள உணவுப் பாத்திரங்கள், உணவு பொதிகள் , தண்ணீர் போத்தல்களை   எடுத்துச் செல்வதால் பாடசாலை மாணவர்கள் குழந்தைகள் சிரமம் அடைவதாகவும் கூறுகின்றனர்.மாணவர்களின் பாடசாலை புத்தகங்கள், பாடசாலையில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்கள், பாடசாலை பைகள், ஆசிரியர்களின் பைகள் போன்றவற்றை கிழித்து, அவர்களின் உடைமைகளை அபகரித்து செல்வதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.பாடசாலையில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குவதற்கு பொறுப்பான வன பாதுகாப்பு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மேலும் கோருகின்றனர்.இது குறித்து கருத்து தெரிவித்த  மன்ராசி தமிழ் உயர்தரப் பாடசாலை முதல்வர் எஸ். திரு. ஜெஸ்டின்,'எங்கள் பாடசாலையில் சுமார் 420 மாணவர்கள் படிக்கின்றனர். தரம் ஒன்று முதல் உயர் தரம் வரையான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையால் ஆசிரியர்கள், சிறுவர்கள் பல்வேறு சிரமங்களையும், அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை கண்டு பயந்து ஓடுவதால் குழந்தைகள் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.      இது பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி கிராம அதிகாரிகளுக்கும், வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இப் பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement