• Nov 23 2024

தாய் மண்ணில் தன் உழைப்பால் உயர்ந்து சமூகத்திற்கு சேவைசெய்யும் ஈழத்தமிழன்..!samugammedia

Tharun / Feb 2nd 2024, 10:01 pm
image

இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களின் தேவைகளைத் தேடி அறிந்து  பல சேவைகளை செய்துவரும் இராஜேஸ்வரி அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளரும் இராஜேஸ்வரி திருமண மண்டபம் மற்றும் இன்னும் பல வணிக துறைகளில் தடம்பதித்தவருமான செல்லத்துரை திருமாறன், இன்றைய தினம் தனது 49 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்குப் பல உதவிகளை வழங்கியுள்ளார். 


அதனடிப்படையில், யாழ். போதனா வைத்தியசாலை  நீரிழிவு சிகிச்சை நிலையத்தில்  சிகிச்சை பெற்று வரும் வறிய சிறுவர்களுக்காக ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்தினை யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் யமுனாநந்தாவிடம்  கையளித்திருந்தார்.  அதனைத்தொடர்ந்து, 


யாழ்ப்பாணத்தில் சில பிரதேசங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 32 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன், துவிச்சக்கர வண்டியும் இராஜேஸ்வரி மண்டபத்தில் வைத்து வழங்கியிருந்தார். 


அன்புச்சோலையில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன் தெரிவு செய்யப்ட்ட மாணவர்களுக்கு ஒரு தொகை  மூக்குக்கண்ணாடிகளையும் இன்றைய தினம் கையளித்திருந்தார். 


இதேவேளை இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 18 குடும்பங்களுக்கு நவீன வீடுகள் அமைத்து கையளித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருமாறன். கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். 



இவர் ஈழத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியில் தன்னுடைய சிந்தனை மற்றும் உழைப்பால் உயர்ந்ததுடன், தனது மக்களுக்காகப் பல சமூகப்பணிகளை தொட்சியாக முன்னெடுத்துவருகின்றமை பாராட்டத்தக்கது.


தாய் மண்ணில் தன் உழைப்பால் உயர்ந்து சமூகத்திற்கு சேவைசெய்யும் ஈழத்தமிழன்.samugammedia இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களின் தேவைகளைத் தேடி அறிந்து  பல சேவைகளை செய்துவரும் இராஜேஸ்வரி அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளரும் இராஜேஸ்வரி திருமண மண்டபம் மற்றும் இன்னும் பல வணிக துறைகளில் தடம்பதித்தவருமான செல்லத்துரை திருமாறன், இன்றைய தினம் தனது 49 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்குப் பல உதவிகளை வழங்கியுள்ளார். அதனடிப்படையில், யாழ். போதனா வைத்தியசாலை  நீரிழிவு சிகிச்சை நிலையத்தில்  சிகிச்சை பெற்று வரும் வறிய சிறுவர்களுக்காக ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்தினை யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் யமுனாநந்தாவிடம்  கையளித்திருந்தார்.  அதனைத்தொடர்ந்து,  யாழ்ப்பாணத்தில் சில பிரதேசங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 32 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன், துவிச்சக்கர வண்டியும் இராஜேஸ்வரி மண்டபத்தில் வைத்து வழங்கியிருந்தார். அன்புச்சோலையில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கியதுடன் தெரிவு செய்யப்ட்ட மாணவர்களுக்கு ஒரு தொகை  மூக்குக்கண்ணாடிகளையும் இன்றைய தினம் கையளித்திருந்தார். இதேவேளை இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 18 குடும்பங்களுக்கு நவீன வீடுகள் அமைத்து கையளித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருமாறன். கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். இவர் ஈழத்தில் பிறந்து தனது சொந்த முயற்சியில் தன்னுடைய சிந்தனை மற்றும் உழைப்பால் உயர்ந்ததுடன், தனது மக்களுக்காகப் பல சமூகப்பணிகளை தொட்சியாக முன்னெடுத்துவருகின்றமை பாராட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement