• Jan 22 2025

எட்டு இந்திய மீனவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு

Tharmini / Jan 22nd 2025, 5:06 pm
image

கிளிநொச்சி இரணைதீவிற்கு அன்மித்த கடற்ப்பகுதியில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுக்கும் ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்ப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது. 

கடந்த (12)ஆம் திகதி  அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 

இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதி மன்ற கட்டளைக்கு அமைய இன்று (22) வரை  விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு  இந்திய மீனவர்களும் இன்றைய தினம் (22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்த முதலாவது குற்றச்சாட்டுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச்சாட்டுக்கு எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்ப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து  கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்  தீர்ப்பளித்ததுள்ளது.


எட்டு இந்திய மீனவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு கிளிநொச்சி இரணைதீவிற்கு அன்மித்த கடற்ப்பகுதியில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுக்கும் ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்ப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது. கடந்த (12)ஆம் திகதி  அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதி மன்ற கட்டளைக்கு அமைய இன்று (22) வரை  விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு  இந்திய மீனவர்களும் இன்றைய தினம் (22) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்த முதலாவது குற்றச்சாட்டுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச்சாட்டுக்கு எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்ப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து  கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம்  தீர்ப்பளித்ததுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement