• Feb 21 2025

வயலுக்குள் இருந்த வயரில் வந்த மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப பலி; கிளிநொச்சியில் சோகம்

Thansita / Feb 20th 2025, 10:13 pm
image

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியம்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்துள்ளார். 

அதே பகுதியை சேர்ந்த 86 வயதுடைய முதியவரே மேற்படி உயிரிழந்துள்ளார்.

நெல்வயலுக்கு போடப்பட்ட மின்குமிழுக்குரிய வயர்,  வயலுக்கு வைக்கப்பட்ட நெருப்பினால் அறுந்த நிலையில் இருந்துள்ளது. குறித்த வயரின் மூலம் வந்த மின்சாரம் முதியவரை தாக்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வயலுக்குள் இருந்த வயரில் வந்த மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப பலி; கிளிநொச்சியில் சோகம் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணியம்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 86 வயதுடைய முதியவரே மேற்படி உயிரிழந்துள்ளார்.நெல்வயலுக்கு போடப்பட்ட மின்குமிழுக்குரிய வயர்,  வயலுக்கு வைக்கப்பட்ட நெருப்பினால் அறுந்த நிலையில் இருந்துள்ளது. குறித்த வயரின் மூலம் வந்த மின்சாரம் முதியவரை தாக்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement