• Sep 19 2024

முன்னாள் அமைச்சர்களான ஹரின், மனுஷவிற்கு தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கைச் செய்தி..!

Chithra / Aug 26th 2024, 12:46 pm
image

Advertisement


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்ணாண்டோ மனுஷ நாணயக்காரவை ஜனாதிபதி தனது ஆலோசகர்களாக நியமித்துள்ளமை குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகர்கள் என்ற அடிப்படையில் தங்களிற்கு கிடைத்த வரப்பிரசாதங்களை அவர்கள்  தேர்தல் செயற்பாடுகளிற்காக பயன்படுத்துகின்றனரா என உன்னிப்பாக தேர்தல் ஆணைக்குழு அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நியமனம் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனினும் வேட்பாளர் என்ற போதிலும் ஜனாதிபதிக்கு  நியமனங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் உள்ளது.

எனினும் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக செயற்படுவதற்காக வாகனங்கள் போன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தினால் அது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான ஹரின், மனுஷவிற்கு தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கைச் செய்தி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்ணாண்டோ மனுஷ நாணயக்காரவை ஜனாதிபதி தனது ஆலோசகர்களாக நியமித்துள்ளமை குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் ஆலோசகர்கள் என்ற அடிப்படையில் தங்களிற்கு கிடைத்த வரப்பிரசாதங்களை அவர்கள்  தேர்தல் செயற்பாடுகளிற்காக பயன்படுத்துகின்றனரா என உன்னிப்பாக தேர்தல் ஆணைக்குழு அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் நியமனம் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.எனினும் வேட்பாளர் என்ற போதிலும் ஜனாதிபதிக்கு  நியமனங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் உள்ளது.எனினும் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக செயற்படுவதற்காக வாகனங்கள் போன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தினால் அது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement