• May 02 2024

பிரதமரை சந்திக்கவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு! அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் முக்கிய முடிவு SamugamMedia

Chithra / Mar 26th 2023, 2:55 pm
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கை எழுத்து மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்றிய அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படும் நிலைக்கு கொண்டு வரப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிதாராச்சி குறிப்பிட்டார்.

பிரதமரை சந்திக்கவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் முக்கிய முடிவு SamugamMedia உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான கோரிக்கை எழுத்து மூலம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்றிய அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இதன் மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படும் நிலைக்கு கொண்டு வரப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிதாராச்சி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement