• Nov 11 2024

தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமுல்- பொய் பிரசாரம் செய்ய தடை!

Tamil nila / Aug 15th 2024, 8:22 pm
image

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று 15ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அனைத்து தேர்தல் விதிமுறைகளும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, பாரபட்சம் ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்பதுடன், ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு வாரம் வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற தேர்தல் வன்முறைகளை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கிகளை பயன்படுத்த பொலிஸ் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

வாக்குகளைப் பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

அரசு நிறுவனங்களையும், அரசு அதிகாரிகளையும் தவறாக பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று வேட்பாளர்களுக்கு சமமான ஊடக பிரபல்யங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளித்து செயல்படக் கூடாது.

சமூக வலையதளங்கள் இம்முறை தீவிரமாக கண்காணிக்கப்படும். சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமுல்- பொய் பிரசாரம் செய்ய தடை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று 15ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அனைத்து தேர்தல் விதிமுறைகளும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.அதன்படி, பாரபட்சம் ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்பதுடன், ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு வாரம் வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.இதுபோன்ற தேர்தல் வன்முறைகளை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஒலிபெருக்கிகளை பயன்படுத்த பொலிஸ் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.வாக்குகளைப் பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்அரசு நிறுவனங்களையும், அரசு அதிகாரிகளையும் தவறாக பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று வேட்பாளர்களுக்கு சமமான ஊடக பிரபல்யங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளித்து செயல்படக் கூடாது.சமூக வலையதளங்கள் இம்முறை தீவிரமாக கண்காணிக்கப்படும். சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement