• Sep 20 2024

அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை- தொடரும் விசாரணைகள்..!

Sharmi / Aug 7th 2024, 12:41 pm
image

Advertisement

அறுவடை செய்யப்பட்ட வயல் பகுதியில் மர்மமான உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட  யானையின் சடலம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை சின்ன கொக்கநாரை வயல் பகுதியில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை(1)  மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று  மீட்கப்பட்டிருந்தது.

 யானையின் சடலம்  இருப்பதை  அவதானித்த விவசாயிகள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து  குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.

மேலும்  மர்மமான குறித்த  யானையின் இறப்பு தொடர்பில்  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.அத்துடன்  வனஜீவராசிகள் திணைக்களம்  குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை உடற்கூற்று  மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.



அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை- தொடரும் விசாரணைகள். அறுவடை செய்யப்பட்ட வயல் பகுதியில் மர்மமான உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட  யானையின் சடலம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை சின்ன கொக்கநாரை வயல் பகுதியில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை(1)  மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று  மீட்கப்பட்டிருந்தது. யானையின் சடலம்  இருப்பதை  அவதானித்த விவசாயிகள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து  குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.மேலும்  மர்மமான குறித்த  யானையின் இறப்பு தொடர்பில்  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.அத்துடன் யானையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.அத்துடன்  வனஜீவராசிகள் திணைக்களம்  குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை உடற்கூற்று  மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement