கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியுடன் காட்டு யானை மோதியதில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை தபலகமுவ பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திய லொறி அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த யானை சுமார் 15 வயது மதிக்கத்தக்க நன்கு வளர்ந்த பெண் விலங்கு எனவும், கந்தளாய் லஹபத்த பகுதிக்கு சென்று திரும்பும் போது வீதியைக் கடக்கும்போது இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் காரியாலயத்தின் பாதுகாப்பு அதிகாரி திரு.எஸ்.ஏ.பி.கே.நந்தசேன தெரிவித்தார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வனவிலங்கு அலுவலகம் மற்றும் அக்போபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலையில் லொறியுடன் மோதுண்டு யானை உயிரிழப்பு. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியுடன் காட்டு யானை மோதியதில் காட்டு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.திருகோணமலை தபலகமுவ பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திய லொறி அடையாளம் காணப்பட்டுள்ளது.உயிரிழந்த யானை சுமார் 15 வயது மதிக்கத்தக்க நன்கு வளர்ந்த பெண் விலங்கு எனவும், கந்தளாய் லஹபத்த பகுதிக்கு சென்று திரும்பும் போது வீதியைக் கடக்கும்போது இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் காரியாலயத்தின் பாதுகாப்பு அதிகாரி திரு.எஸ்.ஏ.பி.கே.நந்தசேன தெரிவித்தார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வனவிலங்கு அலுவலகம் மற்றும் அக்போபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.