டுவிட்டரை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்த ஒன்று என டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் ஸ்பேஸ் மூலம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
குறித்த பேட்டியில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது தொடர்பில் எலான் மஸ்க் கூறியதாவது,
நான் சில நேரங்களில் சான் பிரான்சிஸ்கோ டுவிட்டர் அலுவலகத்தில் உள்ள இருக்கையில் தூங்கியுள்ளேன். டுவிட்டரை வாங்கியபோது தொடக்கத்தில் குறைந்த விளம்பர வருவாய் தற்போது திரும்ப வந்துகொண்டிருக்கிறது.
தற்போதைய நிலை தொடர்ந்தால் நடப்பு காலாண்டில் டுவிட்டரில் வருமானம் நன்றாக இருக்கும். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது சாதாரண விஷயம் அல்ல.
செலவை குறைக்கவில்லையென்றால் நிறுவனம் திவாலாகிவிடும். மொத்த நிறுவனமும் மூழ்கிவிட்டால் யாருக்கும் வேலை கிடைக்காது.
டுவிட்டர் நிறுவனத்தை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்தது. இது ஒன்றும் ஒரு பார்ட்டி நடத்துவது போன்றதல்ல. ஆனாலும், அதை செய்தாகவேண்டியுள்ளது' என்றார்.
இதனிடையே அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பெயர்ப் பலகையில் 'டபிள்யூ' எழுத்தை மறைத்துள்ளார். இதனால், அது டிட்டர் என்று காட்சி அளிக்கிறது.
டுவிட்டர் நிறுவனத்தை விற்கும் எலான் மஸ்க். நிர்வகிப்பது தொடர்பில் வெளியிட்ட தகவல் samugammedia டுவிட்டரை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்த ஒன்று என டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் ஸ்பேஸ் மூலம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.குறித்த பேட்டியில், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது தொடர்பில் எலான் மஸ்க் கூறியதாவது,நான் சில நேரங்களில் சான் பிரான்சிஸ்கோ டுவிட்டர் அலுவலகத்தில் உள்ள இருக்கையில் தூங்கியுள்ளேன். டுவிட்டரை வாங்கியபோது தொடக்கத்தில் குறைந்த விளம்பர வருவாய் தற்போது திரும்ப வந்துகொண்டிருக்கிறது.தற்போதைய நிலை தொடர்ந்தால் நடப்பு காலாண்டில் டுவிட்டரில் வருமானம் நன்றாக இருக்கும். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது சாதாரண விஷயம் அல்ல.செலவை குறைக்கவில்லையென்றால் நிறுவனம் திவாலாகிவிடும். மொத்த நிறுவனமும் மூழ்கிவிட்டால் யாருக்கும் வேலை கிடைக்காது.டுவிட்டர் நிறுவனத்தை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்தது. இது ஒன்றும் ஒரு பார்ட்டி நடத்துவது போன்றதல்ல. ஆனாலும், அதை செய்தாகவேண்டியுள்ளது' என்றார்.இதனிடையே அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பெயர்ப் பலகையில் 'டபிள்யூ' எழுத்தை மறைத்துள்ளார். இதனால், அது டிட்டர் என்று காட்சி அளிக்கிறது.