• Apr 27 2024

பேருந்து வடிவில் வந்த எமன்..!திருமண நாளில் தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!samugammedia

Sharmi / Jun 27th 2023, 10:29 am
image

Advertisement

தம்பதிகள்  திருமண நாளில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 வயதான ஈஸ்வரன் மற்றும் 29 வயதான சங்கீதா என்ற தம்பதியே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இருவருக்கும் கிஷோர் (3) மற்றும் தஷ்வந்த் (1) என்ற  இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்த தம்பதிகளின்  5 ஆம்  ஆண்டு திருமணநாள் என்பதால் கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் தமது இரண்டாவது மகன்  தஷ்வந்துடன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அதன் பொழுது, வேலூரிலிருந்து வந்தவாசி நோக்கி சென்ற தனியார் பேரூந்து, மோட்டார் சைக்கிள்  மீது மோதியுள்ளது.
 
இந்த விபத்தில் இரத்த வெள்ளத்தில் ஈஸ்வரன், சங்கீதாவும் மூழ்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், படுகாயம் அடைந்த மகன்  தஷ்வந்த்தை சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.


பேருந்து வடிவில் வந்த எமன்.திருமண நாளில் தம்பதிக்கு நேர்ந்த சோகம்.samugammedia தம்பதிகள்  திருமண நாளில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 வயதான ஈஸ்வரன் மற்றும் 29 வயதான சங்கீதா என்ற தம்பதியே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. இருவருக்கும் கிஷோர் (3) மற்றும் தஷ்வந்த் (1) என்ற  இரு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் நேற்றைய தினம் இந்த தம்பதிகளின்  5 ஆம்  ஆண்டு திருமணநாள் என்பதால் கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் தமது இரண்டாவது மகன்  தஷ்வந்துடன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.அதன் பொழுது, வேலூரிலிருந்து வந்தவாசி நோக்கி சென்ற தனியார் பேரூந்து, மோட்டார் சைக்கிள்  மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இரத்த வெள்ளத்தில் ஈஸ்வரன், சங்கீதாவும் மூழ்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், படுகாயம் அடைந்த மகன்  தஷ்வந்த்தை சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement