• May 09 2024

குறைக்கப்படும் கட்டணம்..! கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்..! samugammedia

Chithra / Jun 27th 2023, 10:37 am
image

Advertisement

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.

எனினும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனை குறைக்க திட்டமிட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ், ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்போர் வழமையான முறைமையின் கீழ், 14 நாட்களுக்குள் தமக்கான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

விசேட சேவை மூலம் இதனை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பவர்கள், கொரியர் சேவை மூலம் மூன்று தினங்களில் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குறைக்கப்படும் கட்டணம். கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல். samugammedia ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.எனினும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனை குறைக்க திட்டமிட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.அதற்கமைய 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.புதிய திட்டத்தின் கீழ், ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்போர் வழமையான முறைமையின் கீழ், 14 நாட்களுக்குள் தமக்கான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.விசேட சேவை மூலம் இதனை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பவர்கள், கொரியர் சேவை மூலம் மூன்று தினங்களில் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement