• May 19 2024

ஜப்பானில் தொழில் - அமைச்சரிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி! samugammedia

Tamil nila / Apr 9th 2023, 5:45 pm
image

Advertisement

ஜப்பானிய வேலைகளை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக வேலைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்நாட்டு உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கை மற்றும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு ஜப்பானிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வேலை தேடுபவர்களுக்கு அந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஜப்பானிய தொழிலாளர் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தொழில் - அமைச்சரிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி samugammedia ஜப்பானிய வேலைகளை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக வேலைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்நாட்டு உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கை மற்றும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு ஜப்பானிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, வேலை தேடுபவர்களுக்கு அந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஜப்பானிய தொழிலாளர் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement