• Mar 04 2025

யாழில் தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும்..!

Sharmi / Mar 4th 2025, 4:21 pm
image

இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும்,  ஓவியம் சார் கண்காட்சியும் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம்  ஆண்கள் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதியவாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் தூதரகம் ஊடாக டாறா (Tara) நிறுவனம் இணைந்து இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் கலை சார்ந்த படைப்புக்களை  செய்துவரும்  தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும் , கலைக்கண்காட்சியும் நேற்றுமுன்தினம்(02) யாழ்ப்பாணம்  ஆண்கள் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

சோமஸ்கந்தா கல்லூரி அதிபரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் பொருளாளருமான சி.திரிகரன் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில்,  ஜேர்மன் தூதரகம் ஊடாக  வருகைதந்த  டாறா (Tara) நிறுவனத்தினருக்கும் இலங்கையில் இருந்து கலைக் கண்காட்சியில்  கலந்துகொண்ட 15 சுயதொழில் செய்பவர்களுக்குமான கலந்துரையாடல்  இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் ஜேர்மன் நாட்டினுடைய கைவினை பொருட்கள், ஜேர்மன் நாட்டின்  தேவைகள் எவ்வாறு  இருக்கின்றன, எவ்வாறான  பொருட்கள் ஜேர்மன் நாட்டிற்கு தேவைப்படுகின்றது என்பது தாெடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதனைதொடர்ந்து  எமது உள்ளூர் உற்பத்தியாளர்களின் கலைப் பாெருட்களை பார்வையிட்டு,எமது உள்ளூர் உற்பத்தியாளர்களின் தரம், உற்பத்தி பொருட்களின் வெளியீடு (Output) எவ்வாறு இருக்க வேண்டும், சந்தைப்படுத்துவதற்கான. வழிவகைகளையும்  கூறி ஜேர்மன் டாறா (Tara  ) நிறுவனத்தினர் பர்வையிட்டிருந்தனர்.

அத்தோடு எமது உள்ளூர் உற்பத்தி பொருட்களை  ஜேர்மன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது  தொடர்பாக இரண்டாம் கட்ட கலந்துரையாடலின் போது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர்களான  இந்திரபாலா, பரணிதரன் , ஜேர்மன் Tara நிறுவன  கபிலன், மார்டின், ஜெசீலா, யாழ் பல்கலைக்கழக  பட்டப்பின் படிப்பின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியரும்  புதிய வாழ்வு நிறுவனத்தின் ஆலோசகருமான வேல்நம்பி, புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான செல்வி துரைச்சாமி திலகவதி, திட்ட இணைப்பாளர் சு.விஜயலாதன், சுயதாெழில் முயற்சியாளர்கள்,புதியவாழ்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் என  பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.








யாழில் தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும். இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும்,  ஓவியம் சார் கண்காட்சியும் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம்  ஆண்கள் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புதியவாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் தூதரகம் ஊடாக டாறா (Tara) நிறுவனம் இணைந்து இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் கலை சார்ந்த படைப்புக்களை  செய்துவரும்  தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும் , கலைக்கண்காட்சியும் நேற்றுமுன்தினம்(02) யாழ்ப்பாணம்  ஆண்கள் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.சோமஸ்கந்தா கல்லூரி அதிபரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் பொருளாளருமான சி.திரிகரன் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில்,  ஜேர்மன் தூதரகம் ஊடாக  வருகைதந்த  டாறா (Tara) நிறுவனத்தினருக்கும் இலங்கையில் இருந்து கலைக் கண்காட்சியில்  கலந்துகொண்ட 15 சுயதொழில் செய்பவர்களுக்குமான கலந்துரையாடல்  இடம்பெற்றிருந்தது.குறித்த கலந்துரையாடலில் ஜேர்மன் நாட்டினுடைய கைவினை பொருட்கள், ஜேர்மன் நாட்டின்  தேவைகள் எவ்வாறு  இருக்கின்றன, எவ்வாறான  பொருட்கள் ஜேர்மன் நாட்டிற்கு தேவைப்படுகின்றது என்பது தாெடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.அதனைதொடர்ந்து  எமது உள்ளூர் உற்பத்தியாளர்களின் கலைப் பாெருட்களை பார்வையிட்டு,எமது உள்ளூர் உற்பத்தியாளர்களின் தரம், உற்பத்தி பொருட்களின் வெளியீடு (Output) எவ்வாறு இருக்க வேண்டும், சந்தைப்படுத்துவதற்கான. வழிவகைகளையும்  கூறி ஜேர்மன் டாறா (Tara  ) நிறுவனத்தினர் பர்வையிட்டிருந்தனர்.அத்தோடு எமது உள்ளூர் உற்பத்தி பொருட்களை  ஜேர்மன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது  தொடர்பாக இரண்டாம் கட்ட கலந்துரையாடலின் போது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர்களான  இந்திரபாலா, பரணிதரன் , ஜேர்மன் Tara நிறுவன  கபிலன், மார்டின், ஜெசீலா, யாழ் பல்கலைக்கழக  பட்டப்பின் படிப்பின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியரும்  புதிய வாழ்வு நிறுவனத்தின் ஆலோசகருமான வேல்நம்பி, புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான செல்வி துரைச்சாமி திலகவதி, திட்ட இணைப்பாளர் சு.விஜயலாதன், சுயதாெழில் முயற்சியாளர்கள்,புதியவாழ்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் என  பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement