• Apr 27 2024

18வருட திருமண வாழ்கைக்கு முற்றுப்புள்ளி..! முக்கிய நாட்டின் பிரதமர் எடுத்த தீர்மானம்...!samugammedia

Sharmi / Aug 3rd 2023, 12:48 pm
image

Advertisement

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது பாரியார் ஸோபெய் கிரகரி ட்ரூடோ விவாகரத்து செய்து கொள்ளவுள்ளதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 18 ஆண்டு திருமண வாழ்வின் பின்னர் இவ்வாறு பிரிவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அர்த்தபூர்வமானதும், கடினமானதுமான உரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதை காணப்படுவதாகவும் ஆழமான அன்பு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகளின் நலனைக் கருத்திற் கொண்டு தங்களது தனியுரிமையை மதிக்குமாறு ட்ரூடோ தம்பதியினர் கோரியுள்ளனர்.

விவகாரத்திற்கான ஆவணங்களில் ட்ரூடோ தம்பதியினர் கையொப்பிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம் இருவரும் ஒன்றாக விடுமுறையை கழிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். கனடாவில் பதவியில் இருக்கும் போதே விவகாரத்தினை அறிவித்த இரண்டாவது பிரதமராக ஜஸ்ரின் ட்ரூடோ கருதப்படுகின்றார்.

விவகாரத்திற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.


18வருட திருமண வாழ்கைக்கு முற்றுப்புள்ளி. முக்கிய நாட்டின் பிரதமர் எடுத்த தீர்மானம்.samugammedia கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது பாரியார் ஸோபெய் கிரகரி ட்ரூடோ விவாகரத்து செய்து கொள்ளவுள்ளதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அதன்படி, 18 ஆண்டு திருமண வாழ்வின் பின்னர் இவ்வாறு பிரிவதற்கு தீர்மானித்துள்ளனர்.அர்த்தபூர்வமானதும், கடினமானதுமான உரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதை காணப்படுவதாகவும் ஆழமான அன்பு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளின் நலனைக் கருத்திற் கொண்டு தங்களது தனியுரிமையை மதிக்குமாறு ட்ரூடோ தம்பதியினர் கோரியுள்ளனர். விவகாரத்திற்கான ஆவணங்களில் ட்ரூடோ தம்பதியினர் கையொப்பிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அடுத்த வாரம் இருவரும் ஒன்றாக விடுமுறையை கழிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். கனடாவில் பதவியில் இருக்கும் போதே விவகாரத்தினை அறிவித்த இரண்டாவது பிரதமராக ஜஸ்ரின் ட்ரூடோ கருதப்படுகின்றார்.விவகாரத்திற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement