• May 10 2024

46,000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்ற புழுக்கள் – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்! samugammedia

Tamil nila / Aug 3rd 2023, 12:47 pm
image

Advertisement

46,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த Ice Age என்று அழைக்கப்படும் பனியுகத்தில் உறைந்துபோன புழுக்கள் உயிருடன் திரும்பியுள்ளன.

Panagrolaimus kolymaensis எனும் புழு சைபீரியாவில் (Siberia) உறைந்திருந்த படிமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

படிமத்தை உருகவைத்தபோது புழுக்கள் நகர்ந்ததாக PLOS Genetics சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டது.

புழுக்கள் உயிர் பிழைப்பதற்கான ஆற்றலைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.

உறைந்துபோவதற்கு முன் புழுக்கள் சிறிது காலம் போதுமான நீரைப் பெற்றிருக்கவில்லை.

உறைநிலைக்குக் கீழ் 80 பாகை செல்சியஸ் சூழலில் புழுக்கள் பிழைப்பதற்கு அது உதவியதாக ஆய்வாளர்கள் கூறினர். ஆய்வுக்கூடத்தில் புழுக்களுக்குப் போதுமான நீரைக் கொடுக்காதபோது அவை trehalose எனும் சர்க்கரையை உற்பத்தி செய்தன.

உறைந்துபோன நிலையிலும் மரபணுவும் புரதங்களும் பாதுகாக்கப்படுவதற்குச் சர்க்கரை உதவியதாகத் தெரியவந்தது.

இந்நிலையில் புழுக்களை ஆராய்வதால் அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்குக் கூடுதல் தகவல் பெறலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

46,000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்ற புழுக்கள் – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள் samugammedia 46,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த Ice Age என்று அழைக்கப்படும் பனியுகத்தில் உறைந்துபோன புழுக்கள் உயிருடன் திரும்பியுள்ளன.Panagrolaimus kolymaensis எனும் புழு சைபீரியாவில் (Siberia) உறைந்திருந்த படிமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.படிமத்தை உருகவைத்தபோது புழுக்கள் நகர்ந்ததாக PLOS Genetics சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டது.புழுக்கள் உயிர் பிழைப்பதற்கான ஆற்றலைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.உறைந்துபோவதற்கு முன் புழுக்கள் சிறிது காலம் போதுமான நீரைப் பெற்றிருக்கவில்லை.உறைநிலைக்குக் கீழ் 80 பாகை செல்சியஸ் சூழலில் புழுக்கள் பிழைப்பதற்கு அது உதவியதாக ஆய்வாளர்கள் கூறினர். ஆய்வுக்கூடத்தில் புழுக்களுக்குப் போதுமான நீரைக் கொடுக்காதபோது அவை trehalose எனும் சர்க்கரையை உற்பத்தி செய்தன.உறைந்துபோன நிலையிலும் மரபணுவும் புரதங்களும் பாதுகாக்கப்படுவதற்குச் சர்க்கரை உதவியதாகத் தெரியவந்தது.இந்நிலையில் புழுக்களை ஆராய்வதால் அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்குக் கூடுதல் தகவல் பெறலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement