• Jul 27 2024

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய இங்கிலாந்து! samugammedia

Tamil nila / Nov 8th 2023, 10:34 pm
image

Advertisement

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய Ben Stokes 108 ஓட்டங்களையும், Dawid Malan 87 ஓட்டங்களையும், Chris Woakes 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede 3 விக்கெட்டுகளையும், Aryan Dutt, Logan van Beea ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 340 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் நெதர்லாந்து அணி சார்பில் Teja Nidamanuru ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Moeen Ali, Adil Rashid ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய இங்கிலாந்து samugammedia உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 160 ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.இங்கிலாந்து அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய Ben Stokes 108 ஓட்டங்களையும், Dawid Malan 87 ஓட்டங்களையும், Chris Woakes 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede 3 விக்கெட்டுகளையும், Aryan Dutt, Logan van Beea ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.பின்னர் 340 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.துடுப்பாட்டத்தில் நெதர்லாந்து அணி சார்பில் Teja Nidamanuru ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Moeen Ali, Adil Rashid ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

Advertisement

Advertisement