• May 13 2024

கிரிக்கெட்டுக்காக ஒன்றுபட்டதை போல இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும்...! அங்கஜன் எம்.பி அழைப்பு...!samugammedia

Sharmi / Nov 23rd 2023, 8:47 am
image

Advertisement

கிரிக்கெட்டுக்காக ஒன்றுபட்டதை போல இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் கிரிக்கெட் துறை தொடர்பில் 225 உறுப்பினர்களும் விசேட கவனம் செலுத்தினார்கள். அதாவது கிரிக்கெட்டை  சீர்செய்ய வேண்டும் என்றும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கவேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்தனர்.

இந்த ஒற்றுமையை கிரிக்கெட்டுக்கு கொடுக்கமுடியுமானால் ஏன் நாம் எமது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கொடுக்க முடியாது

இனப்பிரச்சினைக்கு தீர்வு எடுக்கும்போது மட்டும் நமக்குள் ஆயிரம் முரண்பாடுகள். நாட்டு மக்களை விட கிரிக்கெட் அவ்வளவு முக்கியமாக போய்விட்டதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை நாட்டை மீட்டெடுக்க திட்டங்கள் மட்டும் போதாது மக்களின் ஒன்றினைந்த பங்களிப்பு அவசியம். அதற்கு நேர்மையான இன நல்லிணக்கமாக நடைபெறவேண்டும்.

இது நம்நாடு என்ற எண்ணம் அனைத்து மக்களுக்கும் வரவேண்டும். கிரிக்கெட்டுக்கு ஒன்றுசேர்ந்தது போல் இந்த நாட்டின் இன முரண்பாடுகளை தீர்க்கவும் இந்த பாராளுமன்றம் ஒன்றுபடவேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிரிக்கெட்டுக்காக ஒன்றுபட்டதை போல இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். அங்கஜன் எம்.பி அழைப்பு.samugammedia கிரிக்கெட்டுக்காக ஒன்றுபட்டதை போல இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் கிரிக்கெட் துறை தொடர்பில் 225 உறுப்பினர்களும் விசேட கவனம் செலுத்தினார்கள். அதாவது கிரிக்கெட்டை  சீர்செய்ய வேண்டும் என்றும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கவேண்டும் என்று அனைவரும் குரல் கொடுத்தனர்.இந்த ஒற்றுமையை கிரிக்கெட்டுக்கு கொடுக்கமுடியுமானால் ஏன் நாம் எமது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கொடுக்க முடியாதுஇனப்பிரச்சினைக்கு தீர்வு எடுக்கும்போது மட்டும் நமக்குள் ஆயிரம் முரண்பாடுகள். நாட்டு மக்களை விட கிரிக்கெட் அவ்வளவு முக்கியமாக போய்விட்டதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.அதேவேளை நாட்டை மீட்டெடுக்க திட்டங்கள் மட்டும் போதாது மக்களின் ஒன்றினைந்த பங்களிப்பு அவசியம். அதற்கு நேர்மையான இன நல்லிணக்கமாக நடைபெறவேண்டும்.இது நம்நாடு என்ற எண்ணம் அனைத்து மக்களுக்கும் வரவேண்டும். கிரிக்கெட்டுக்கு ஒன்றுசேர்ந்தது போல் இந்த நாட்டின் இன முரண்பாடுகளை தீர்க்கவும் இந்த பாராளுமன்றம் ஒன்றுபடவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement