• May 04 2024

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை! போக்குவரத்தும் முற்றாக பாதிப்பு samugammedia

Chithra / Nov 23rd 2023, 8:51 am
image

Advertisement


பசறை - லுணுகலை வீதி 20 ஆம் கட்டை பகுதியில் நேற்று இரவு பாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக லுணுகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால், பசறை லுணுகலை வீதியின் 20 ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பசறை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  நேற்று நள்ளிரவு மலையகத்துக்கான ரயில் பாதையில் ஹாலிஎல - உடுவர பிரதேசத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மலையக ரயில் பாதையில் பதுளை வரை இயங்கும் ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதி பலாங்கொடை சமனலவெவ ஹல்பே பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை போக்குவரத்தும் முற்றாக பாதிப்பு samugammedia பசறை - லுணுகலை வீதி 20 ஆம் கட்டை பகுதியில் நேற்று இரவு பாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக லுணுகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதனால், பசறை லுணுகலை வீதியின் 20 ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், குறித்த பகுதியில் மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை  நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், பசறை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.இதேவேளை,  நேற்று நள்ளிரவு மலையகத்துக்கான ரயில் பாதையில் ஹாலிஎல - உடுவர பிரதேசத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.மலையக ரயில் பாதையில் பதுளை வரை இயங்கும் ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதி பலாங்கொடை சமனலவெவ ஹல்பே பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement