• Nov 23 2024

வெளியானது பரீட்சை முடிவுகள்- 4232 பேர் தேர்வு..!samugammedia

mathuri / Jan 28th 2024, 6:03 am
image

2,002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 2, 2023 அன்று நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை திணைக்களம் வழங்கிய பிரதேச செயலகப் பிரிவுகளின்படி நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4232 பேரின் பட்டியல் நேற்று (27) வெளியிடப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 2002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk  இல் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




வெளியானது பரீட்சை முடிவுகள்- 4232 பேர் தேர்வு.samugammedia 2,002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக டிசம்பர் 2, 2023 அன்று நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பரீட்சை திணைக்களம் வழங்கிய பிரதேச செயலகப் பிரிவுகளின்படி நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4232 பேரின் பட்டியல் நேற்று (27) வெளியிடப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.இந்த பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 2002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk  இல் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement