திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் கடற்கரைப் பகுதியில் தமிழ் ஆயுத போராட்ட அமைப்பால் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று(09) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அங்கிருந்து எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பூர் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பூர் பொலிஸாரினால் அகழ்வு செய்யப்படுவதற்கு நீதிமன்றின் அனுமதியைப் பெற்று மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் முன்னிலையில் இவ் அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கிருந்து எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
இதனையடுத்து குறித்த இடத்தில் தோண்டப்பட்ட இடம் மீண்டும் பெக்கோ இயந்திரத்தைக் கொண்டு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழரின் முக்கிய பகுதியில் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி நிறைவு. திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் கடற்கரைப் பகுதியில் தமிழ் ஆயுத போராட்ட அமைப்பால் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று(09) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.எனினும் அங்கிருந்து எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பூர் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பூர் பொலிஸாரினால் அகழ்வு செய்யப்படுவதற்கு நீதிமன்றின் அனுமதியைப் பெற்று மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீம் பௌஸான் முன்னிலையில் இவ் அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கிருந்து எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.இதனையடுத்து குறித்த இடத்தில் தோண்டப்பட்ட இடம் மீண்டும் பெக்கோ இயந்திரத்தைக் கொண்டு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.