• May 03 2024

ஜப்பானில் பரபரப்பு..! பிரதமர் மீது குண்டு வீச்சு தாக்குதல்...! samugammedia

Sharmi / Apr 15th 2023, 11:55 am
image

Advertisement

ஜப்பான் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் குண்டு வீசப்பட்டதாகவும் எனினும் பிரதமர் பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டார் எனவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கு ஜப்பானில் பிரதமர் பியுமோ கிசிடா கலந்துகொண்ட கூட்டத்தில் சந்தேக நபர் ஒருவர் அவரை இலக்குவைத்து புகைக்குண்டொன்றை வீசியுள்ளார்

எனினும் பிரதமர் காயங்களின்றி தப்பியுள்ளார்.


பாரிய சத்தமொன்று கேட்டது பிரதமர் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் உடனடியாக செயற்பட்டார் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் ஜூன் மாதம் முன்னாள் பிரதமர் சின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சின்சோ அபேயின் படுகொலையை தொடர்ந்து அரசியல்வாதிகளிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் ஆராய்ந்துவருகின்றது.

கிசிடா உரையாற்ற ஆரம்பித்த வேளையே புகைக் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.


பொலிஸார் நபர் ஒருவரை தரையில் வீழ்த்தி மடக்கி பிடிப்பதையும் பொதுமக்கள் சிதறுண்டு ஓடுவதையும் காண்பிக்கும்  படங்கள் வெளியாகியுள்ளன

ஜப்பானில் பரபரப்பு. பிரதமர் மீது குண்டு வீச்சு தாக்குதல். samugammedia ஜப்பான் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் குண்டு வீசப்பட்டதாகவும் எனினும் பிரதமர் பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டார் எனவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேற்கு ஜப்பானில் பிரதமர் பியுமோ கிசிடா கலந்துகொண்ட கூட்டத்தில் சந்தேக நபர் ஒருவர் அவரை இலக்குவைத்து புகைக்குண்டொன்றை வீசியுள்ளார்எனினும் பிரதமர் காயங்களின்றி தப்பியுள்ளார்.பாரிய சத்தமொன்று கேட்டது பிரதமர் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் உடனடியாக செயற்பட்டார் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த வருடம் ஜூன் மாதம் முன்னாள் பிரதமர் சின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சின்சோ அபேயின் படுகொலையை தொடர்ந்து அரசியல்வாதிகளிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் ஆராய்ந்துவருகின்றது.கிசிடா உரையாற்ற ஆரம்பித்த வேளையே புகைக் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.பொலிஸார் நபர் ஒருவரை தரையில் வீழ்த்தி மடக்கி பிடிப்பதையும் பொதுமக்கள் சிதறுண்டு ஓடுவதையும் காண்பிக்கும்  படங்கள் வெளியாகியுள்ளன

Advertisement

Advertisement

Advertisement