• May 17 2024

திருமணத்திற்காக கேக் போல் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக கட்டடம்! samugammedia

Tamil nila / Jun 18th 2023, 8:14 pm
image

Advertisement

திருமணம் என்று பொதுவாக யோசிக்கும் போது அந்த அந்த மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்களது மத ஆலயங்களில் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் ஆடம்பர விடுதிகளில் நடத்துவார்கள்.

அதையும் தாண்டி வித்தியாசமாக திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் வானத்தில் பறந்து கொண்டே திருமணம் செய்வது,  நீருக்கு அடியில் செய்துக்கொள்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.



ஆனால் இங்கு ஒரு திருமணம் கேக்கில் நடைபெற்றது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம இங்கிலாந்தில் தான் இந்த வித்தியசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஜோனா வாஸ்கோன்செலோஸ் என்ற ஒரு போர்த்துகீசிய கலைஞர்,  இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள வாடெஸ்டன் மேனரில் திருமண கேக் பாணியில் 12 மீ அதாவது 39 அடி உயரமான திருமண அரங்கத்தை உருவாக்கியுள்ளார்.

ஒரு அடுக்கு கட்டிடம் இல்லை. மூன்று அடுக்கு கேக் போலவே உருவாக்கியுள்ளார். இந்த கேக் திருமண அரங்க திட்டம் பற்றி விவரித்த ஜோனா இதை உருவாக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டதாகவும்,  அதைச் செய்ய போதுமான பணத்தை கொடுக்க இதே போன்ற விளையாட்டுத்தனமான எண்ணங்கள் கொண்ட ஆள் வேண்டும் என்று தேடி வந்ததாக குறிப்பிடுகிறார்

இது கேக் போலவே தோற்றம் கொண்ட பீங்கான் டைல்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த தனித்துவமான டைல்களை போர்த்துகீசிய பிரமுகர் வியுவா லாமேகோ உருவாக்கி இங்கிலாந்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்த தனித்துவமான டைல்கள் இங்கிலாந்து காலநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.  இந்த அரங்கத்தில் வெளிப்புறம் மட்டும் அழகாக அமைக்கப்படவில்லை.

உட்புறங்கள் முழுவதும் 18 ஆம் நூற்றாண்டின் இசைத்தட்டுகள்,  கெய்ன்ஸ்பரோ மற்றும் வாட்டியோவின் ஓவியங்கள் மற்றும் அரிய பீங்கான் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இங்கு நீங்கள் திருமணம் செய்து கொள்ளவும் அழகிய இன்ஸ்டா படங்கள் எடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இன்று ( ஜூன் 18)  முதல் அக்டோபர் 26 வரை இந்த புகழ்பெற்ற இந்த இடத்தை நீங்கள் பார்வையிடலாம்.

திருமணத்திற்காக கேக் போல் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக கட்டடம் samugammedia திருமணம் என்று பொதுவாக யோசிக்கும் போது அந்த அந்த மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்களது மத ஆலயங்களில் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் ஆடம்பர விடுதிகளில் நடத்துவார்கள்.அதையும் தாண்டி வித்தியாசமாக திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் வானத்தில் பறந்து கொண்டே திருமணம் செய்வது,  நீருக்கு அடியில் செய்துக்கொள்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் இங்கு ஒரு திருமணம் கேக்கில் நடைபெற்றது என்றால் உங்களால் நம்ப முடியுமா ஆம இங்கிலாந்தில் தான் இந்த வித்தியசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் ஜோனா வாஸ்கோன்செலோஸ் என்ற ஒரு போர்த்துகீசிய கலைஞர்,  இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள வாடெஸ்டன் மேனரில் திருமண கேக் பாணியில் 12 மீ அதாவது 39 அடி உயரமான திருமண அரங்கத்தை உருவாக்கியுள்ளார்.ஒரு அடுக்கு கட்டிடம் இல்லை. மூன்று அடுக்கு கேக் போலவே உருவாக்கியுள்ளார். இந்த கேக் திருமண அரங்க திட்டம் பற்றி விவரித்த ஜோனா இதை உருவாக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டதாகவும்,  அதைச் செய்ய போதுமான பணத்தை கொடுக்க இதே போன்ற விளையாட்டுத்தனமான எண்ணங்கள் கொண்ட ஆள் வேண்டும் என்று தேடி வந்ததாக குறிப்பிடுகிறார்இது கேக் போலவே தோற்றம் கொண்ட பீங்கான் டைல்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த தனித்துவமான டைல்களை போர்த்துகீசிய பிரமுகர் வியுவா லாமேகோ உருவாக்கி இங்கிலாந்துக்கு கொண்டு வந்துள்ளார்.இந்த தனித்துவமான டைல்கள் இங்கிலாந்து காலநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.  இந்த அரங்கத்தில் வெளிப்புறம் மட்டும் அழகாக அமைக்கப்படவில்லை.உட்புறங்கள் முழுவதும் 18 ஆம் நூற்றாண்டின் இசைத்தட்டுகள்,  கெய்ன்ஸ்பரோ மற்றும் வாட்டியோவின் ஓவியங்கள் மற்றும் அரிய பீங்கான் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இங்கு நீங்கள் திருமணம் செய்து கொள்ளவும் அழகிய இன்ஸ்டா படங்கள் எடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இன்று ( ஜூன் 18)  முதல் அக்டோபர் 26 வரை இந்த புகழ்பெற்ற இந்த இடத்தை நீங்கள் பார்வையிடலாம்.

Advertisement

Advertisement

Advertisement