• May 04 2024

தொலைபேசியுடன் உல்லாச பயணம்...! விபத்தில் சிக்கிய யுவதிகள்...! தமிழர் பகுதியில் விபரீதம்...!

Sharmi / Apr 5th 2024, 5:03 pm
image

Advertisement

புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து இன்று(05) காலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விசுவமடுவில் இருந்து  திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும், முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும்    புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த  இரு யுவதிகளும் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் 23,24 வயதுடைய ஒட்டுசுட்டானை சேர்ந்த யுவதிகளே காயமடைந்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் யுவதிகளின் விபத்திற்கு தொலைபேசி பாவனையே காரணம் என தெரியவந்துள்ளது. 



தொலைபேசியுடன் உல்லாச பயணம். விபத்தில் சிக்கிய யுவதிகள். தமிழர் பகுதியில் விபரீதம். புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து இன்று(05) காலை இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,விசுவமடுவில் இருந்து  திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும், முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும்    புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த  இரு யுவதிகளும் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து சம்பவத்தில் 23,24 வயதுடைய ஒட்டுசுட்டானை சேர்ந்த யுவதிகளே காயமடைந்துள்ளனர்.விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் யுவதிகளின் விபத்திற்கு தொலைபேசி பாவனையே காரணம் என தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement