அபிவிருத்திப் பணிகளுக்குச் சமாந்தரமாக, ஆட்சேர்ப்புக்களுக்கு சமாந்தரமாக நாம் சுகாதாரத் துறையில் தொழில் வல்லுனர்களை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் தற்பொழுது பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
மருத்துவ அதிகாரிகளின் சங்கம் கூறுவது போன்று அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மருத்துவர்கள் மேலதிக கடமைக்கான கொடுப்பனவாக செலுத்தப்படக்கூடிய தொகை எண்பதுக்கு ஒன்றிலிருந்து நூற்றியிருபதுக்கு ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.
லீவு நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடமையாற்றுவதற்கான கொடுப்பனவு இருபதுக்கு ஒன்றிலிருந்து முப்பதுக்கு ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரம் அல்ல மருத்துவர்கள் தங்கி இருப்பதற்கான கொடுப்பனவு, போக்குவரத்து சம்பந்தமான பிரச்சினைகள், வாகன உரிமைப் பத்திரங்கள் பற்றிய பிரச்சினைகள்,
பட்டபின் படிப்பு கல்வியை மேற்கொள்ளக்கூடிய மருத்துவர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் இவை அனைத்தும் இற்றைப்படுத்தப்படவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் பல மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இன்னமும் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல ஆயத்தமாக இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கின்ற மனித வள பற்றாக்குறைக்கு மத்தியில் இவ்வாறு இந்த வசதிகளை நீங்கள் குறைக்கப் போவது இந்த மருத்துவர்கள் இங்கு தொடர்ந்து தங்கி இருப்பார்களாக என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே இந்த புத்திஜீவிகள் வெளியேறுவது சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்தார்.
மருத்துவ மூளைசாலிகளின் வெளியேற்றம்; அரசின் நடவடிக்கைக்கு கவலை வெளியிட்ட சஜித் அபிவிருத்திப் பணிகளுக்குச் சமாந்தரமாக, ஆட்சேர்ப்புக்களுக்கு சமாந்தரமாக நாம் சுகாதாரத் துறையில் தொழில் வல்லுனர்களை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தற்பொழுது பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. மருத்துவ அதிகாரிகளின் சங்கம் கூறுவது போன்று அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மருத்துவர்கள் மேலதிக கடமைக்கான கொடுப்பனவாக செலுத்தப்படக்கூடிய தொகை எண்பதுக்கு ஒன்றிலிருந்து நூற்றியிருபதுக்கு ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.லீவு நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடமையாற்றுவதற்கான கொடுப்பனவு இருபதுக்கு ஒன்றிலிருந்து முப்பதுக்கு ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.அது மாத்திரம் அல்ல மருத்துவர்கள் தங்கி இருப்பதற்கான கொடுப்பனவு, போக்குவரத்து சம்பந்தமான பிரச்சினைகள், வாகன உரிமைப் பத்திரங்கள் பற்றிய பிரச்சினைகள், பட்டபின் படிப்பு கல்வியை மேற்கொள்ளக்கூடிய மருத்துவர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் இவை அனைத்தும் இற்றைப்படுத்தப்படவில்லை.இந்த சந்தர்ப்பத்தில் பல மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இன்னமும் பலர் வெளிநாடுகளுக்கு செல்ல ஆயத்தமாக இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கின்ற மனித வள பற்றாக்குறைக்கு மத்தியில் இவ்வாறு இந்த வசதிகளை நீங்கள் குறைக்கப் போவது இந்த மருத்துவர்கள் இங்கு தொடர்ந்து தங்கி இருப்பார்களாக என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த புத்திஜீவிகள் வெளியேறுவது சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டும் எனத்தெரிவித்தார்.